உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம்

13

தெடுத்த இரசத்தை அருந்துதலைக்காட்டினும், தாகத்தினால் வறண்டு உலர்ந்து போயிருக்கும் என் நாவிற்கு இதன் நீரில் ஒரு குடங்கையளவு முகந்து உண்ணுவது மிகவும் ஆரோக்கிய மாயிருக்கும். வாருங்கள்! நாம் முன்னேபோய், மொழுமொழு வென்று ஓடும் இவ்வாய்க்காலுக்கு வழிதெரிந்து கொள்வோம்' என்று நீலலோசனன் மொழிந்தான்.

இவ்வாறு சொல்லிக்கொண்டே நீலலோசனன் தன் குதிரையை விரைந்தகதியிற் செலுத்தச் சில நிமிஷங்களுள் எல்லாம் அவ்வழி ஓர் அகன்ற இடத்திற்கொண்டுபோய் விட்டது. அதற்குமேல் வேறு வழியும் அங்கே காணப்பட வில்லை.

உடனே நீலலோசனன் மிகநெருங்கிய மர அடர்ப்பின்கீழ்ச் சணலாடையாற் சமைந்த ஒரு கூடாரத்தைக்கண்டு “நாம் வழி தெரிந்துகொள்ளுதற்கு இங்கு யாரேனும் இருப்பர். அதோ ஒரு கூடாரம் பார்!” என்று தன் காவலாளரை நோக்கிக் கூறினான்.

அவ்வாய்க்காலின்

ஓசை

முன்னிலும் இப்போது மிகவுந்தெளி வாய்க்கேட்டது; நீர் பளிங்குபோல் ஒழுகும் அவ்வருவியின் பக்கத்தேயுள்ள ஓரிடத்தில் நீலலோசனன் சென்றவுடனே, அங்குப் பேரழகாற் சிறந்த ஓர் இளம்பெண் தன்முகமாய்வருங் குதிரைக்குளம்படியின் ஓசையும் அறியாமல் மிகவும் ஆழ்ந்து நினைந்த சிந்தையினளாய் அமர்ந்திருப்பக்

கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/67&oldid=1581322" இலிருந்து மீள்விக்கப்பட்டது