உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

அதிகாரம் - 3 தெளிநீர்வேலி

நீலலோசனன் குதிரைக் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தவாறே அவ்விளம்பெண் முகத்தை விளங்கப் பார்த்துக் கொண்டு நெருங்கிப்போய் அவள்பக்கத்தே சென்று நிறுத்தி னான். அவள் உருவத்தின் பேரழகைப்பார்த்துப் பெரிதும் வியப்படைந்தனன். முதற் கணத்தே அவன் அறிவைக் கலக்கி விட்ட அப்பேரெழில் இப்போது அவன் உள்ளத்தே பையப்பைய நுழைந்து மயக்கிற்று. அவள் அவ்வாய்க்கால் ஓரத்தில்

இருந்தமையால் தன் அடிகளை அதன்நீரிற் கழுவிக்

காண்டிருந்தனள் போலும்! அவள்பக்கத்தே யாழ் என்னும் ஓர் இசைக்கருவியிருந்தது. அவள் மிகவும் ஆழ்ந்த சிந்தனை யிலிருந்தமையால், தன்னைச்சூழவிருந்த அக்கருவியினையும் பிறவற்றையும் தான் சிறிதுங் கவனித்திலள்.

மிகவுங்கரிய அவள் கூந்தல் தனக்கு இயற்கையிலேயுள்ள வழுவழுப்பினால் விளக்கமுடையதாய் இப்போது ஞாயிற்றின் கதிர்கள் தோய்தலால் மிகமிளிர்ந்து கற்றை கற்றையாய் அவிழ்ந்து விரிந்து கிடந்தது.பால்நுரைபோன் மிகமெல்லிய தான வெள்ளிய சல்லா மேல் விலகித் தோட்புறத்திற் றொகுக்கப் பட்டுப் பசிய புல்நிலத்தில் தாழவீழ்ந்திருந்தது. மற்றை அங்கங் களின் அமைப்புக்கு இசையப் பொருந்தித் திருத்தமாகக் கடைந் தெடுத்தனபோல் நீள ஒழுகிக்கிடக்கும் அத்தோள்களின் சரிவில் கொழுமையான அம்மயிர்க்கற்றைகள் அலைந்தன. அத்தோள் களின் மணிக்கட்டுகளில் மாற்றுயர்ந்த பொன்னாற் செய்யப் பட்ட தொடியணிந்து விளங்கின. இவ்விளம்பெண் சிறிது உயரமான வடிவுடையளாயிருந்தனள். மங்கைப்பருவத் தினளா கலின், இவள் அங்கங்களெல்லாம் வளர்ந்து நிரம்ப வேண்டும் நிலையை எய்தித் திரண்டு உருண்டு மறுவின்றிச் செவ்விதின் விளங்குவவாயின. இவள் மேனிநிறம் கரியதா தலின்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/68&oldid=1581323" இலிருந்து மீள்விக்கப்பட்டது