உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம்

13

தளுதளுப்பாக வெளிறிய வண்ணமுடையதாய் மிகவுந்தெளிந்து இலங்கிற்று. செழுங்குருதி கன்னங்களிற்பரவிச் செவ்விய வண்ணத்தோய்ச்சல் உண்டாக்கிற்று. அவள்முகம் கோழி முட்டை வடிவினதாய் வயங்கிற்று. அன்னப்பறவைபோல இயற்கைநலங் கனிந்து நீண்டு அடங்குங் கழுத்தின்மேல் இவள் தலை நிறையொக்கப் பொருத்தப்பட்டிருந்தது. முதலிலே நீலலோசனன் கண்ட சில நிமிஷங்களாக, வள் பரிய விழிகளைப் பொதிந்துகொண்ட மூடிகளின் இறைப்பைமயிர் கன்னத்திற்படிந்திருந்தன. இப்போது இவள் தன் விழிகளைத் திறந்தவுடனே கரியபுட்டிலினின்றும் புறப்பட்ட இருபெரிய கனவுகள் அவன் உயிரின் ஆழ்ந்த அறைகளினுட்புகுந்து அறிவை மயக்குதல்போல இரண்டு ஒளிகள் அவன்மேற் பாய்ந்தன. அவள் அணிந்திருந்த ஆடை மிக உயர்ந்ததென்று முன்னரே கூறினோம். மேல் இட்டிருந்த உடை பொற்கொட்டை களுடையனவாய் வெறுங்கரியபட்டினாற் சமைக்கப்பட்டி ருந்தது; இடையிற் பூட்டியிருந்தமேகலை கொளுத்துவாயில் உயர்ந்தவயிரமணிகள் அழுத்தப்பட்டு அவிர்ந்தன;ஆடையின் ஓரங்கள் வண்ணத் தோய்ச்சல் சிறிதாயுள்ள பட்டில் பூத் தொழில் செய்யப் பட்டிருந்தன. இப்பெண்ணின் முதற்றோற்றத் தினாலேயே இவள்யாரோ ஒரு பிரபுவின் குடியிற்பிறந்த அருமை மகளாதல் வேண்டுமென்பது நன்கு அறியக்கிடந்தது. இப்பெண் இருந்த இடத்திற்குச் சிறிது தூரத்தில் அமைக்கப் பட்ட கூடாரவாயிலின் கீழ்ப் பூச்சிதறிய பசும்புல் நிலத்தில் நன்கு அணிந்த ருமகளிர் சாய்ந்து கொண்டிருந்தமையினை நீலலோசனன் கண்டபோதும் இக்கருத்து வலியுறுவதாயிற்று.

இனி யிவற்றையெல்லாம் பார்த்த பௌத்த இளைஞனான நீலலோசனன் அறிவு மயங்கிப் பரவயமாகினான் என்பது ஒரு வியப்பன்று; ஏனெனில் அக்காட்சி முழுவதும் ஒருவன் அறிவைமயக்கி அவனுக்கு உவகையினை மிகுவிப்பது திண்ண மேயாகலின் என்க. ஆழத்தில் கிடக்கும் கூழாங்கற்படைகளும் கண்ணுக்குப் புலனாகும்படி பளிங்குபோல் தெளிந்து ஓடும் அந்த நீர் ஓடையும், ஞாயிற்றின் கதிர்களையெல்லாந் தன்னிடத்துச் சிறைப்படுத்திப் பொதிந்து வைத்து இப்போது அவற்றை மேல் எல்லாம் வார்த்துக்கொண்டாற் போலப் பசிய தழைகளெல்லாம் பொன்னென மிளிரக் கிளைநெருங்கித் தண்ணிழல்பயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/69&oldid=1581324" இலிருந்து மீள்விக்கப்பட்டது