உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் -13

உண்மையிலேயே கேசரிவீரன் அப்பெண்ணைப் பார்த்த விடத்துத் தான்செல்லவேண்டிய வழிதெரிவதற்குச் சமயம் நேர்ந்தது என்பதைத்தவிர பிறிதொன்றும் நினைந்திலன். வியாக்கிரவீரனோ சிறிது இளம்பருவ முடையனாதலால் பெண்மக்கள் அழகின் நலத்தைக்கண்டு மயங்குதற்கு இடம் பெற்று, அவள் முகத்தின்மேற் சல்லாவை இழுக்கும் அக்கணத்தே அவள் வடிவழகைக் கண்டு வியந்து “பௌத்தன் அறிய இவள் நிரம்ப அழகுடையளாய் இருக்கின்றனள்!” என்றான்.

அவ்வுரைக்கு ஒத்து நீலலோசனனும் “அழகா! துறக்க நாட்டிற்குரியரான அரம்பைமாதர்களில் இவர் ஒருவராக இருத்தல் வேண்டும்! இவர் இந்நிலமகள் அல்லர்” என்று கூறினன்.

இளைஞனான

தன் எசமானன் இங்ஙனங் காதல் வயப்பட்டுக் கூறியதைக்கேட்டுக் கேசரிவீரன் முகத்தில் ஒரு வெறுப்புக்குறி தோன்றிற்றாயினும், தனக்குயர்ந் தோனிடத்துப் பாராட்டு மரியாதையினால் வாய் பேசாதிருந்தனன். இப்போது நீலலோசனன் தன் குதிரையைச் சிலவடி முன்னேறச் செலுத்தி அம்மங்கையிருக்கும் இடத்திற்குப் பதினைந்துஅடி தூரத்தே நிறுத்தி மரியாதையோடு தாழ்ந்து “மாதரீர், நீலகிரி நகரத்திற்குச் செல்லும் வழியிதுவோ என்று அறியும்பொருட்டு, நுங்கள் ஆழ்ந்த சிந்தனையினிடையே நான் புகுந்து வினவுதலைப் பொறுக்கும்படி வேண்டுகின்றேன்” என்றான்.

அதற்கு அம்மாது, "நீங்கள் வருவதாகத்தோன்றும் வழிமுகமாய்ப் பார்த்தால், இது வழியன்று” என்று கரும்பினு மினிய சொற்களான் மொழிந்தாள்.

66

தனைக்கேட்டதுங் கேசரிவீரன் மற்றையோனை நோக்கி 'அவலட்சணமுள்ள அக்குடியானவனைப் பார்த்து நான் முன்னமே ஐயப்பட்டேன்” என்று மெல்லச் சொன்னான்.

66

இதற்குள் அம்மங்கை நீலலோசனனைத் திரும்பவும் பார்த்து இந்நாடுகளில் திரிந்து பழக்கம் இல்லாதவர்கள் காணக்கூடாததாயினும், இராசபாட்டைக்கு இங்கேயிருந்து போகும் ஒரு சந்து வழியிருக்கின்றது. நானும் நீலகிரி நகரத்திற்குத்தான் போகிறேன்” என்றனள். இவ்வாறு சொல்லி இப்படிச்சொல்லியதே மிகுதியென்று எண்ணினாற் போலவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/71&oldid=1581326" இலிருந்து மீள்விக்கப்பட்டது