உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

43

இங்ஙனஞ் சொன்னமையால் தானுங் கூடப்போக விரும்பு கின்றனள் என்று நினைக்கப்படுமே என அஞ்சினாற் போலவுஞ் சடுதியில் மேலும் பேசுவதை நிறுத்திவிட்டாள்.

உடனே நீலலோசனன் “நங்கைமீர் நுங்கட்கு வேறு நல்ல துணையில்லாமல் எங்கள் துணையை ஏற்றுக்கொள்வீர் களாயின், நீங்கள் செல்லும் வழியில் நுங்களைப் பாதுகாத்துச் செல்லும் சமயம் எனக்கு வாய்த்ததைப்பற்றி மகிழ்ச்சியும் இறுமாப்பும் எய்துகின்றேன்!” என்று கூறினான்.

6

66

இதற்கு அந்த நங்கை ஏதும் உடனே மறுமொழி சொல்ல வில்லை; அவள் அணிந்திருந்த முக்காட்டின் மடிப்புகளின் வழியே அவள் முகம் சிறிது தோன்றியபோது அவள் திரும்பவும் ஆழ்ந்து சிந்திப்பதாகக் காணப்பட்டாள். கடைசியாகத் தான் அனுசரிக்க வேண்டும் ஓர் ஏற்பாட்டை முடிவு செய்தாள் போலச் சடுதியில் நீலலோசனனைப் பார்த்து 'இப்படிப்பட்ட துணையோடு செல்வதில் அனுசிதமானது ஒன்றுமில்லை, முக்கியமாய் உண்மையைச் சொல்லுமிடத்து, இந்நேரம், என்னிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டியதக்க ஆண்துணை இன்னும் வராமையால் நான் மோசம்போனேன்; அல்லது இவ்விடங்களில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அவர்களை நானாவது போய்க் கண்டுபிடிக்கவேண்டும். என் கூடவந்த பணிப்பெண்கள் அருகாமையில் இருக்கின்றார்கள்; அவர்கள் உங்களுடன் வந்தவர்களை மரியாதையோடும் ற்றுக்கொள்வார்கள். யான் தங்கட்கு முன்னே ஏே

ஏதோ

காண்டுவந்து வைக்கும் உணவை ஏற்றுக் கொள்ளத் தயை செய்வீர்களானால், தாங்கள் பயணப்படுவதற்கு முன்னே சிறிதாகாரம் செய்வது நல்லதாகும்." என்று முன்னிலும் இனிமைமிக்க குரலோடும் பேசினாள்.

உடனே நீலலோசனன் குதிரையை விட்டுக் கீழேகுதித்துப், பெற்றுக்கொள்ளுவதற்குத் தயாராய் நின்ற வியாக்கிரவீரன் கையிற் கடிவாளத்தை விட்டெறிந்தான். இவ்வாறு நேர்ந்த இச்சம்பவத்தைக்குறித்து விசாரமடைந்தவன் போலக் கேசரிவீரன் காணப்பட்டான்; ஆயினும், வாலிபப்பருவத்தி னனான தன் எசமானனைக் கண்டித்து ஒரு சொல்லேனுஞ் சொல்ல அவன் துணிந்திலன்; ஆகவே, அவன் வியாக்கிர வீரனுடன் சென்று கூடாரத்துக்கு எதிரிலே சாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/72&oldid=1581327" இலிருந்து மீள்விக்கப்பட்டது