உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 13

நிலையிலிருந்த அப்பணிப்பெண்கள் இப்போதுதான் எழுந் திருந்த இடத்திற் சேர்ந்தான். அக்கூடாரத்திற்குச் சிறிது அருகாமையிலே அழகான மூன்று குதிரைகள் கொழுமையான புல் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் அழகிய கல்லணை, அங்கவடி முதலியனவெல்லாம் அக்கூடாரத்தினுள்ளேயே வைக்கப்பட்டிருந்தன. அப்பணிப்பெண்களில் ஒருத்தி கன்னங் கறேல் என்று இருந்தாள். மற்றொருத்தி நீலகிரி நாட்டுக்குரிய பெண்கள் வகுப்பைச் சேர்ந்தவளாய் அழகாய் இளம் பருவத்தோடுங் கூடினவளாயிருந்தாள்.

6

பௌத்த இளைஞனுடன் வந்த இவர்கள் அந்நங்கையின் பணிப் பெண்களோடு உறவாடிக் கொண்டிருக்கையில், நீலலோசனனும் அந்நங்கையும் எவ்வாறிருந்தனர் என்பதைப் பற்றிக் கூறப்புகுவோம். அந்நங்கை மிகவும் அழகிய தாய் அமைந்த தனது கையை நயமாகச் சிறிது அசைத்து அழைத்து நீலலோசனனைத் தனக்கு அருகாமையில் புல்லின்மேல்

ருக்கும்படி சொன்னாள். நீலகிரிக்குப்போகும் பயணத்தில் தானும் அவனோடு செல்ல இசைந்தமையால், இதற்குமுன் அவனை அன்னியனைப்போற் பாவித்து மரியாதை காட்டிய நடக்கையின் எல்லையை மீறினாள்போலவும், இப்போது நேசம்மிகுந்து பழக்கமானதைத் தெரிவிப்பாள்போலவும், அந்நங்கை தன்முகத்தை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துவிட்டாள். அருகாமையிலிருந்து அவன் முகத்தின் பேரழகை இங்ஙனம் நீலலோசனன் கண்டபோது,நான் முன்னே தூரத்தில் அவளைக் கண்டு எண்ணியது உண்மையென்று சிந்தித்தான். அவள் சிறிதேறக்குறைய இருபது வயதுள்ளவள் போற் காணப்பட்டாள், மடந்தைப் பருவங்கடந்து அரிவைப் பருவம் அடையும்பொழுது முகிழ்க்கின்ற பெருநலங் கனியப் பெற்றிருந்தாள்; ஆனாலும் மடந்தைப் பருவத்தின் புத்திளமை இன்னும் சிறிதேனும் மாறப்பெற்றிலள். அவளது முக அமைப்பானது மிகவுந் திருத்தமாயிருந்தது. அவள் கண்கள் பெரியனவாயும், அடிக்கடிமாறுங் குறிப்புடையனவாயும் இருந்தன. அவைகள் சில சமயம் பேரொளிகாட்டி விளங்கின; வேறுசிலசமயம் மென்மையாயும் மங்கலுடனும் தோன்றின; சில சமயம் ஒரு நொடிக்குள் தமது ஒளிவன்மை முழுதும் அப் பௌத்த இளைஞன் மேல் வீசி, அதன்பின் கருகி நீண்ட மயிர் நிறைந்த இறைகளாகிய திரைகளின் உள்ளே தம்மை மறைத்து

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/73&oldid=1581328" இலிருந்து மீள்விக்கப்பட்டது