உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

45

ஒளிந்தன. குறுகிச் சிறிதாயிருந்தாலும். செந்நிறம் மிகுந்து திரண்ட இதழ்களோடுங் கூடின அவள்வாயானது பேசும் போதெல்லாம், அவள்தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையின் முத்துக்களைப் போல வெண்மையான பற்களைத் தோற்று வித்தது. அவள் விடும் மூச்சோ அமிர்த வாசனையிற் சிறிது தோய்ந்து வந்தாற்போலத் தோன்றியது. இங்ஙனங் கிட்டக் கண்ட பார்வையானது நீலலோசனன் அந்நங்கையின் அழகைப்பற்றிக் கொண்ட அபிப்பிராயத்தை உறுதி செய்தது. ஆயினும், உற்சாகத்தான் எழுந்த வியப்பும்., அதிசயத்தான் எழுந்த மயக்கமும் தம்முதல் மும்முரம்மாறித் தணிந்தவுடனே, நீலலோசனன் பெண்கட்குரிய மென்மைக் குணத்தில் ஏதோ சிறிது அவளிடத்திற் குறை பட்டிருப்பதைக் கண்டான்; ஒரு பெண்ணை எப்பொழுதும் வசீகரமுடையளாகச் செய்வதும், ஒருவன் உள்ளத்தில் அவள் அழகின் வலிமையால் ஒரு நொடிக்குள் உண்டான மதிமயக்கத்தை அங்கே என்றும் நிலைபெறச்செய்வதுமான நாணத்தோடுங் கூடிய இயற்கை மடப்பம் ஏதோ சிறிது அவள் இல்லாமையை அவன் கண்டுணர்ந்தான்.

பால்

நீலலோசனன் அந்நங்கையின் அருகாமையிற் புன்மேல் உட்கார்ந்தபோது “சுடுசுடுப்பான ஒரு குடியானவன் எனக்குப் பிசகான வழிகாட்டினமையாலன்றோ உங்களுடைய பழக்கத் தைப்பெறும் பாக்கியம் உடை யனானேன்?” என்று கூறினான்.

66

ஒருவகையில் எவ்வளவோ அர்த்தத்தைத் தரக்கூடியதும், மற்றொரு வகையில் தான் நினையாமலும் அறியாமலும் உண்டான பழக்கத்தால் தோன்றியதை ஒப்பதுமான ஒரு பார்வையை அவன்மேற் செலுத்தி அவள் வாக்களித்த துணையானது வந்து சேராமையாலன்றோ நானும் தங்கள் சமூகத்தாலும் தங்களுடன் வந்தோராலும் உண்டான நல்ல துணையைப் பெறுவேனாயினேன்?" என்று தானும் எதிர் மொழிந்தாள்.

உடனே நீலலோசனன் “இந்த நீலகிரிப்பிரதேசங்கள் வழிச் செல்வோர் அபாயமின்றிச் செல்வதற்கு ஏற்றன அல்ல, இதற்கு நான் சமீபத்தில் அடைந்த அனுபவமேபோதும்" என்றான்.

அதற்கு அவள் “மெய்தான்!” என்று சொல்லி, அப்பௌத்த இளைஞன்மேல் இரக்கமும் கவனமும் உடையாள் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/74&oldid=1581329" இலிருந்து மீள்விக்கப்பட்டது