உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம்

13

அவனை நோக்கினாள். “எங்கே அவர்களிடத்தில் அகப்பட்டுக் கொள்கின்றேனோ என்று நான் நினைக்கும் போதெல்லாம் நடுக்கம் அடையும்படியான அக்கள்வரில் எவரையேனும் நீங்கள்

எதிர்க்கப்பட்டிருக்கக் கூடுமோ?”

“நங்கையீர், நல்லான் என்னுங் கள்வர் தலைவனது ஆறலை கூட்டத்தைப்பற்றி நீங்கள் குறிப்பாய்ச் சொல்லு கிறீர்கள் போலும். அஞ்சாவீரனான இக்கொள்ளைத் தலைவன் மெய்யாகவேயிருக்கின்றான். இளைப்படைந்தோரை உற்சாகப் படுத்த வேண்டியேனும், பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டி யேனும் வீடுகளிற் பொய்க்கதையாய்ப் பேசப்படுவதில் அவன் சேர்ந்தனன் அல்லன் என்றுநான் சொல்லல் பிழையன்று என்பதற்கு என் அனுபவமே போதும்." என நீலலோசனன் மறுமொழி கூறினான்.

கட

இங்ஙனம் நீலலோசனன் பேசியபோது அந்நங்கையின் முகம் மிக்க பயங்கரம் அடைந்து காட்டிற்று; அவள் நடுக்கமுற்ற குரலோடும் “நீங்கள் அக்கொள்ளைக் காரரிடம் அகப்பட்டீர் களோ?” என்றாள்.

உடனே நீலலோசனன் “இன்று காலையிலேதான்” என்று அதற்கு விடைகூறினான். "ஆனால், எங்களை எதிர்த்துச் சண்டை யிட்டதில் அவர்கள் சந்தோஷிப்பதற்குச் சிறிதும் இடமில்லை. அப்படியில்லாவிட்டால் நங்கைமீர், உங்களுக்கு இக்கதையைச் சொல்ல இங்கு வந்திருக்கமாட்டேன்.'

பிறகு, நீலலோசனன் கள்வர் கூட்டத்தை எதிர்த்த விவரங்களெல்லாம் முற்றும் எடுத்துக் கூறினான், இவ்வாறு இவற்றை இவன் சொல்லிவருகையில் மிகவும் அழகியதான அந்நங்கையின் முகத்தில் நடுக்கம், அச்சம், சந்தேகம், அதிசயம் முதலிய குறிப்புகள் அடுத்தடுத்துத் தோன்றின. மிகவும் ஆராமையான குரலோடு அவள் அப்பௌத்த இளைஞன் அவ்வபாயத்தினின்றுந் தப்பியதைப் பற்றியும், அவனதும் அவன்பின் வந்தோரதும் வலிமையைப் பற்றியும் வாழ்த்திச் சொல்லுகையில் அவள் முகத்தில் அதிசயக்குறிப்பு அழுந்தி விளங்கிற்று. அதன்பின் அவள் தன்பெயர் மீனாம்பாள் என்றும், தான் நீலகிரி நகரத்திற்றான் வழக்கமாய் வசிப்ப தென்றும், பணக்கார வியாபாரியான தன்தந்தை பன்னிரண்டு மாதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/75&oldid=1581330" இலிருந்து மீள்விக்கப்பட்டது