உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

47

கட்குமுன் திடீரென இறந்து போனமையால் தான் தொலைவி லுள்ள ஒரு நகரத்திற்குப் பயணம்போக வேண்டியதாயிற் றென்றும், அங்கே சென்று தன்காரியத்தை முடித்தபின்னர்த் திரும்பவும் தன்வீடு நோக்கிப் புறப்பட்டு வரலாயிற்றென்றுங் கூறினாள்.

மீனாம்பாள் மறுபடியும் அவனை நோக்கி “என்னோடு தங்கியிருந்தவரான என் நண்பர்கள் என் பயணத்தில் நான் முதற்றங்குமிடம் வரையில் ஒரு தக்க துணையை அனுப்பியிருந் தார்கள்; அதன் பின் என்னுடன் வழிச்செல்வதற்கு வழிகாட்டி களும் காவற்காரரும் வரும்படி ஏற்பாடுகள் செய்யப் பட்டன. காலைப்பொழுது மிகவும் இனிதாயிருந்தமையால், தக்க துணையின்றிச் செல்வதால் நேரும் அபாயங்களையும் மறந்து, புதியதுணை விரைவில் எம்முடன் வந்துசேரும் என நினைத்து, நல்லவெயில் நேரத்தில் தெளி நீர் வேலி எனப்படு வதாகிய இந்த இடத்திற்றான் நான் தங்குவேன் என்று சொல்லி விட்டு, என்பணிப் பெண்களோடு பயணம் புறப்பட்டு வந்தேன்; ஆனால், ஏதோகாரணத்தால் அந்தத்துணை இன்னும் வந்து சேர்ந்திலது; இதனால், மனம்துணுக்குற்றும், இங்ஙனம் மோசம் போனமை யால் சலிப்புற்றும் மிக்க துயரத்தோடு யான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பெருமானே, தாங்களும் தங்கள் பின் வந்தோரும் இவ்விடம் வந்து சேர்ந்தீர்கள்” என்று சொன்னாள்.

6

உடனே நீலலோசனன் “அழகிற்சிறந்த அம்மை மீனாம் பாள், துணையில்லாமற் செல்வது உங்கட்கு அபாயகரமேயா யினும், இப்போது யான் உங்கள் துணையாய்வரும்படி நேர்ந்த மையால் நீங்கள் இனி மனங்கலங்கி அஞ்சவேண்டிய அவசிய மில்லை. நீங்கள் முன்னமே தெரிந்துகொண்டபடி யானும் நீலகிரிக்குத்தான் செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அங்கே நான் முடித்துக் கொள்ள வேண்டிய சில அவசிய மான காரிய முண்டு.” என்று மறுமொழி சொன்னான்.

இதற்குமேல், நீலலோசனன் தனது இலௌகீக நிலை யின்னதென்றேனும், தன் காரியங்கள் இத்தகையன என்றேனும், தான் நீலகிரிக்குச் செல்லுங் காரியம் இனைத்தென்றேனும் தானே ஏதும் விவரித்து மொழிந்திலன்; அந்தநங்கையும் நற்குடியிற் பிறந்து நன்கு வளர்க்கப்பட்டு நாகரீகமுடையவள் போற்றோன் றினமையால் தானும் அவ்விஷயங்களைப்பற்றி அவனை ஏதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/76&oldid=1581331" இலிருந்து மீள்விக்கப்பட்டது