உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் - 13

உசாவிற்றிலள். அப்படியாயினும், அவன் தன்பெயர் நீலலோசனன் என்று அவளுக்கு அறிவித்தான்; அவளோ அவனது தோற்றத்தையும் அவன்பின்னே இருவர் ஏவலராய் வருவதையுங்கண்டு அவன் ஒரு செல்வமகனா யிருக்க வேண்டுமென்று எண்ணினாள்.

அழகிற் சிறந்த மீனாம்பாள் இப்போது தன்கைகளை மெதுவாகத் தட்டித் தன்பணிப்பெண்களை அழைத்தாள்; அவர்களுங் கடுகவந்து புல்லின்மேல் நேர்த்தியான சிற்றுண் டியும், திராட்சப்பழ இரசமும், இனியபானகமும் பரப்பி வைத்தார்கள்; சுற்றிலும் மரக் கொம்புகளில் நெருங்கித் தொங்கிய பலவகையான இனிய பழங்களும் அங்கே கொண்டுவந்து வைக்கப்பட்ட ன மீனாம்பாள் அங்கு வைக்கப் பட்ட திராட்சப்பழ இரசத்தைப்பருகுதற்கு மனம் உவந்தவளே யாயினும், அவள் அதனைவிட்டு இனிய பானகத்தையே அருந்தி னாள்; நீலலோசனன் பௌத்த மதத்தைத் தழுவினவனாயினும், பௌத்த சந்நியாசியான பிக்ஷுக்கள் போல் திராட்சப்பழ இரசத்தை வெறுப்பவன் அல்லனாயினும், மதிமயக்கும் பொருள்களில் தனக்கு இயற்கையாகவே உள்ள ஓர் அருவருப்பி னால் அவனும் அதனைத்தொடாது ஒழிந்தான். இங்ஙனம், அப்பெருமானும் பெருமாட்டியுமான இருவரும் உண்டு முடியும்வரையில் திராட்சப்பழ இரசம் நிறைத்திருந்த குடுவை யைத் தொடவேயில்லை; வேறு பானகங்ளையே பருகினார்கள். அப்போது அவர்கள் இடையிடையே அங்குள்ள இயற்கைத் தோற்றங்களின் பொலிவையேவியந்து பேசிக் கொண்டிருந் தார்கள். நீலலோசனன் புதுப்பழக்கமாய்வாய்த்த இப்பெண் ணின் அறிவையும், நாகரிக விழைவையும் கண்டு விரும்புதற்குக் காரணம் வாய்த்தாற் போலவே, அவளும் அவனிடத்திலியற் கையாகத் தோன்றிய மனஅறிவின் உயர்ச்சியை வியக்கலானாள்.

அவர்கள் குதிரைகளின் மேல் ஏறிப் பயணம் புறப்பட் டார்கள். நீலலோசனன் எழில் கனிந்த மீனாம்பாள் பக்கத்திலே சவாரி செய்தான்; அவன் பின் வந்த ஆண்களிருவரும் அவள் பின் வந்த பணிப் பெண்கள் இருவருடன் சென்றார்கள். தன் பக்கத்தே வந்த கரிய பணிப்பெண் தன்னைப் பேச்சிலிழுக்க மிக முயன்றும் அதற்கு அகப்படாமல் விசனகரமான சிந்தனை யோடும் மௌனமாய்ச் சென்றதனால், தாடி மயிர் நீண்ட கேசரிவீரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/77&oldid=1581332" இலிருந்து மீள்விக்கப்பட்டது