உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

49

அவள் பக்கத்திற் சென்றவனாகவே சொல்லக் கூடவில்லை; மற்று வியாக்கிர வீரனோ அழகியாளான மற்றொரு பணிப் பெண்ணோடு மகிழ்ச்சியாகப் பேச்சாடிக் கொண்டு சென்றான். ஏவலர் பகுதியிரண்டிற்கும் அறுபதடி முன்னே சவாரி செய்து கொண்டு போன நீலலோசனனோ, மீனாம்பாள் தன் குதிரை மேல் உட்கார்ந்திருக்கும் அழகையும், நேர்த்தியையும், இலாகவத்தையும் கண்டு வியவாமலிருக்கக் கூடவில்லை, அவள் குதிரையேற்றத்தில் மிகப் பழகினவ ளென்பது தெளிவாயிற்று; அவள் ஏறியிருந்த குதிரை கூடிய வரையில் நல்ல சுபாவமுள்ள பிராணியாகவே யிருந்தாலும், அது சுறுசுறுப்பு மிகுதியுமுடை தாயிருந்தமையால், தைரிய மாக ஏறி நடத்த வல்லவரன்றிப் பிறர் அதன் மேலிருக்கத் துணியார். அஃது இன்ன சாதியைச் சேர்ந்ததென்று தெரிய அக்குதிரையின் பின்னே சகனத்தின் மேல் சுட்ட தழும்பு ஒன்று இருந்தது, இஃது எவ்வளவு அருமையான சிறந்த வகுப்பைச் சேர்ந்ததென்று அறிந்து கொள்ள நீலலோசனனுக்குத் தன்றேசத்திலேயே இவைகளில் ஒன்றுந் தெரியாது.

அவனும் மீனாம்பாளும் பலவேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே செல்வாராயினர், தான் பெருந்திரளான திரவியத்திற்குச் சுதந்தரமுடைய வளாதலால் தானே தனக்கு எசமானி என்பதும், உறவினர் யாருடைய அதிகாரத்திற்கும் தான் உட்பட்டவள் அல்லள் என்பதும், உலக வாழ்க்கையில் எந்தக் காரியத்திலும் தான் தன் மனப்போக்கின்படி செல்லச் சிறிதும் தடையில்லை என்பதும் ஏதோ மிருதுவாகவும் தற்செயலாகவும் அவள் வாயினின்றும் பிறந்த சொற்களைக் கொண்டு அவன் அனுமித்து அறியும்படியாகப் பேசினாள். இவ்விருவரையும் ஒன்று சேர்த்த இந்தப் பிரயாணமுடிவில் கழிவதாயிருந்தாலும் இப்போதுண்டான நிலையற்ற இச் சினேகிதத்தில் இயல்பாக விளைவதான நம்பிக்கையினால் சிறிதுங் கள்ளங் கவடு இல்லாத தோற்றத்தோடும் இவள் அங்ஙனம் பேசினாளாயினும், இவளிடத்தில் அடக்கம் சிறிது மில்லையென்றும் அதி சீக்கிரத்திற் பழக்கமாய்ப் பேசுவதுண் டென்றும் நீலலோசனன் நினையாம லிருக்கக்கூடவில்லை. ஆகவே, அவன் கண்கள் இவள் அழகை வியந்து பாராட்டி னாலும், அவன் கொஞ்சம் முதலிற் சந்தித்த போது சில நிமிஷம் உண்டான அதன் வசியத்தில் அகப்படாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/78&oldid=1581333" இலிருந்து மீள்விக்கப்பட்டது