உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் - 13

வேறாய் நின்றது. இங்ஙனம் அவன் இதனை உணர்ந்து அறிந்த போது, இந்தக் காரணம் பற்றியே இவளிடத்தில் அவன் பின்னும் மிகுதியாய் மரியாதை பாராட்டி வந்ததன்றியும், அழகிற் சிறந்த நங்கை ஒருத்தியோடு பிரயாணஞ் செய்ய நேர்ந்த வாலிப வீரன் அனுசரிக்க வேண்டிய வினயத்தில் தான் எங்கே தவறிப் போவதாகக் காணப்படுமோ என்றும் அஞ்சினான்,

வெயிலும் உழைப்பும் மிக்க பகற்காலத்தின் கிளர்ச்சி தணிந்து மசங்கின மாலைப்பொழுது நாற்புறமும் வளைய, அப்போது தோன்றும் மங்கலான வெளிச்சம் மென்மையாய் ஓசையின்றி அமைதி செய்யுந் தன்மையோடும் வரவர மீனாம்பாளின் குரலொலியும் மெல்லிதாயிற்று--அவள் சொற்கள் உருக்கம் மிகுந்து வந்தன--அவள் அந்த மாலைப் பொழுதின் செயலை உணர்வது போற்றோன்றினாள், நீலலோசனன் தான் அறியாமலே, இவர்கள் சம்பாஷனை எந்த வழியாகவோ காதலைப் பற்றி நடைபெறுவதாயிற்று; மீனாம்பாள் மெல்லெனப் பெருமூச்செறிந்து அதனைத்தான் சிறிது உணர்ந்ததேயல்லாமல், அதன் சுவையைத்தான் அனுபவித்து அறிந்ததே யில்லையென்று கூறினாள், பொருள் மிகுதியும் உடையளாய்த் தானே எசமானியாயிருந்தும், பொருளைப் பற்றித் தன்னிடம் கூட்டங் கூடினவர்களையன்றித் தனக்கு வேறு நேசர்கள் இல்லாமையும், தான் இதுகாறும் இல்லற வாழ்க்கையில் நிலைபெறாமையும் புதுமையாய்த் தோன்று மெனச் சொல்லி, ஆடவர் தன்னை வந்து மணங் கேட்பதில் தனக்கு விருப்பமில்லையென்றும், தான் சுகமடை தற்கு ஒத்த ஆடவனெவனையும் தான் இதுகாறும் எதிர்ப்பட்ட தில்லை என்றும் தன் கருத்தை எடுத்துரைத்தாள்.

“ஏனென்றால், என் தேசத்தில் எழுதப்பட்ட அற்புதக் கதைகளையும் உங்கள் தேசத்தில் உள்ளாரால் எழுதப்பட்ட படித்ததனாலும், எழுத்திலில்லாமல் வாய் மொழியாக மாத்திரம் வழங்கிவரும் காதற்கதைகள் பலவற்றையும் கேட்டிருத்தலினாலும், என் மனத்திற்கு அல்லது என் பாவனைக்கு இசைந்தது இன்னது தான் என்று தெரியப் பெற்றேன்.” என்று அவள் பின்னும் மொழிந்தாள்.

அழகிய கதைகள் எல்லாவற்றையும்

“அங்ஙனம் மனத்திற்கு இசைந்தது?” என்று நீலலோசனன் வினவினான். இங்ஙனம் இவன் வினவியது சம்பாஷணையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/79&oldid=1581334" இலிருந்து மீள்விக்கப்பட்டது