உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

51

நீளச் செய்வதற்கேயல்லாமல், சில நாழிகைகட்கு முன்னே தான் பழக்கமாகித் தம் ஏவலர் கூப்பிடு தூரத்திற்கு அப்பால் வர, மங்கல் மாலைப் பொழுதில் பந்தலிட்டாற் போன்ற மரங்களின் நீழலிலே தனிமையில் வரும் இளைஞனும் நங்கையுமான தமக்கு இவ்விஷயம் தக்கதென எண்ணியதனால் அன்று.

அதன் பின் மீனாம்பாள் தன் மனோபாவனைக்கு இசைந்த விழுப் பொருள் இத் தன்மையதாக இருத்தல் வேண்டுமென்று சுருங்கச் சொல்வாளாயினள்; எப்போதாயினும் தன்னாற் காதலிக்கப்படுவானும், அல்லது தன் உள்ளத்தை வசப்படுத்தித் தன் சொத்தையும் கையையும் பற்றுதற்கு உரியானும் இன்ன இயல்புடையனாயிருக்க வேண்டுமென்று கூறினாள். தன்றோழி மார்களுள் ஒருத்தியோடாயினும் இவ்வுலகத்தில் இதிற் கவலையேயில்லாத ஒருவனோடாயினும் எங்ஙனம் பேசு வாளோ அங்ஙனமே அவள் தன்னெதிரே யாரிடத்தில் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லுகின்றோம் என்பத னையும் மறந்தாள் போல ஒருவகையான குரலோடும் மாதிரி யோடும் அரைவாசியாழ்ந்த சிந்தனையோடும் பேசிக் கொண்டே சென்றாள். ஆனால், நீலலோசனன் தான் கேட்டதை நம்பக் கூடா விட்டாலும், லும், தன்னிடத்துப் பிள்ளை மைக் மக்

குணமான தற்பெருமையும் மனச் செருக்கும் இல்லாமையால் அவன் தன் மனத்தில் வலுப்பட்டுவரும் சந்தேகத்தை உண்மை யென்று துணிவதற்கு விருப்பமற்ற வனாயிருந்தாலும் கடைசி யாக அவன் தன்னையே மீனாம்பாள் சுட்டிப் பேசுகிறாள் என்பதை உணராமலிருக்கக் கூடவில்லை. அவளோ அவன் உடம்பின் அழகையும் வலிமையையும் அவனுடை ய வெள்ளை யுள்ளத்தையும் மனத்தேர்ச்சியையும் அவன்றன் உபகார சிந்தையையும் அஞ்சா வீரத்தையும் விரித்துப் பேசினாள்; இவ்வாறு பேசியபோது இவள் தனக்கு அவ்வுயர்ந்த ஒழுக்கங் களை நுணுக்கமாய் ஆழ்ந்தறியும் வல்லமை உண்டென்று காட்டாநிற்ப, அவன் தனது உருவப் படத்தையே இவள் இங்ஙனம் எழுதிக் காட்டுகின்றாளெனத் தன் அகத்தே வலுவில் தோன்றிய துணிவினால் தன்னைப் பற்றித் தான் முன் அறியாததனையும் அறிந்து கொண்டான்.

66

அப்படிப்பட்ட என் மனத்தாற் பாவிக்கப்பட்ட விழுப் பொருள், ஐய! நீலலோசன, இவ்வுலகத்தில் அதற்கிசைந்த தோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/80&oldid=1581335" இலிருந்து மீள்விக்கப்பட்டது