உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

உயிர்

மறைமலையம் 13

இருக்கின்றதென நினைக்கிறீரா? இருக்குமானால் அத்தன்மையதான அதன் உள்ளத்தை யான் வசப்படுத்திக் கொள்ள ஆவலித்திருக்கின்றேன்” என்று மீனாம்பாள் முடித்துக் கூறினாள்.

ஒரு நிமிஷம் அப்பௌத்த இளைஞன் எக்கச்செக்கமான தன் நிலைமையை உணர்ந்தான்: ஆயினும் மறுநிமிஷத்தில் அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, "மீனாம்பாள் பெருமாட்டியின் வசீகரமும் உள்ளத் தேர்ச்சியும் தன்னால் தெரிந்து கொள்ளப் பட்டஎப்படிப்பட்ட நெஞ்சத்தையும் வசப்படுத்துவது திண்ணம்” என்று சந்தோஷகரமான உபசார மொழி சொன்னான்.

மீனாம்பாள், நடுங்கிய மகிழ்ச்சியும் வெற்றிக்குறிப்பும் சந்தேகமும் ஐயுறவுங் கலந்த ஒரு பார்வையை நீலலோசனன் மேல் வீசிய போது, அதனை அவன் தெரிந்து கொள்ளுதற்குப் போதுமான வெளிச்சம் இன்னும் இருந்தது; அதன்பிற் சில நிமிஷம் கழித்து அவள், தன் ஆவலின் முதிர்ச்சியைத் தெரிவிப்பதாய் ஆழமும் செழுமையும் வாய்ந்த குரலோடும், “அவ்வளவு இனிமையான நினைவிலே யான் மகிழ்ச்சியடையத் துணியலாமா? யான் நினைத்த பொருள்அகப்பட்டால் என்னைப் போலவே அதுவும் என்பால் அன்பு பாராட்டுமென யான் மனப்பால் குடிக்கலாமா?" என்று பேசியபோது அவளது சொல்லின் ஓசை மிகவும் குறைந்து போனமையால் அச்சொற் களே நன்றாகப் புலப்படவில்லை.

66

66

பருமாட்டி, நீங்கள் கொண்ட நினைவு ஒப்புயர் வில்லாததாய் இருத்தலின், அதைப் போல்வது உண்மையிற் கிடைத்தல் இலேசானது அன்று,” என்று நீலலோசனன் களிப்புடன் சிரித்துக் கொண்டே மறுமொழி புகன்றா இவ்வாறு அவன் களிப்போடு பேசியது அந்நங்கையின் நினைவைத் தான் தெரிந்து கொண்டதாக எண்ணக்கூடிய குற்றம் தன்னை விட்டு விலகுதற்காகவேயன்றி வேறில்லை.

66

உடனே மீனாம்பாள் 'இந்த நினைவு உண்மையில் அகப்பட்டிருக்கிறது” என்று மொழிந்தாள்; அப்போது அவள் ஏறியிருந்த குதிரை நீலலோசனன் குதிரையின் பக்கத்தே நெருங்கி வந்தமையால், மிக உருக்கத்தோடும் மெதுவாய்ப் பேசிய அவள் சொற்கள் நன்கு புலப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/81&oldid=1581336" இலிருந்து மீள்விக்கப்பட்டது