உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

53

"நல்லது! அதோ எதிரே விளக்கு வெளிச்சம் தோன்று கிறது! நாம் இன்றிரவு தங்குவதற்கென்று நீங்கள் முன்னமே தெரிவித்த கோபுரம் அது தான் என்பதிற் சந்தேகம் இல்லையே? நம் குதிரைகளை முன்னே செலுத்துவாமாக, ஏனென்றால் சென்ற இரண்டு மூன்று நாழிகையாக நாம் வழியில் தங்கித் தங்கி வந்தாம் என நினைக்கின்றேன்.” என்று சடுதியிற் கூறினான்.

இருண்டு கொண்டு வரும் அப்பொழுதின் டையே மின்னல் தோன்றுவதை யொப்பப் பார்வை ஒன்று வீசியது-- சுறுசுறுப்பாக அசைந்து தோன்றிய அப்பார்வையானது மீனாம்பாள் கண்களினின்றும் புறப்பட்டு நீலலோசனன் முகத்தின் மேற்பட்டது; தன் சொற்களால் அவன் உள்ளத்திற் றோன்றியது இன்னதென்று அறியவும், தான் அவனால் அலட்சியமாக எண்ணப்பட்டாளோ அல்லது தான் பேசியதெல்லாம் அவனைக்சுட்டியே என்பதை அவன் தெரிந்து கொள்ளத் தன் சொற்கள் தெளிவாயிருந்தனவோ என்று தெரியவுமே அப்படி நோக்கினாள். ஆனால் அவனோ அப்பார்வையைக் கவனிக்க வில்லை; அதே நிமிஷத்தில் தான் சொல்லியதற்கு ஏற்பவே தன் குதிரையைக் காலால் நெரித்து முன்னுக்கு நடத்தினான். அப்பொழுது மீனாம்பாள், “நான் சொல்லிய கோபுரம் அதுவன்று; அதற்கு நாம் இன்னும் இரண்டு நாழிகை அளவு சவாரி போக வேண்டும். அந்த விளக்கு வெளிச்சம் ஓர் ஏழைக்குடிசையில் உள்ளது; இதற்கு முன் ஒருமுறை நான் இவ்வழியில் எதிர் முகமாய்ப் பிரயாணம் செய்திருக்கின்றே னாகையால், இங்குள்ள ஒவ்வோரிடமும் என் ஞாபகத்திலிருக் கின்றன” என்றாள்.

அதற்கு நீலலோசனன்,“ஆயினும் இந்தக் குடிசையில் நாம் சில நிமிஷங்களாவது தங்க வேண்டும்: அதனால் நம்முடைய குதிரைகளை உணவூட்டி இளைப்பாற்றுவிக்கலாம்: ஏனெனில், அத்தகைய உணவில்லாமல் நம் குதிரைகள் இந்நாள் முழுதும் அடைந்த உழைப்பின் மிகுதியால் இன்னும் இரண்டுநாழிகை தூரங்கூடப் போவதற்கு ஏலாதனவாயிருக்கின்றன. மறுமொழி தந்தான்.

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/82&oldid=1581337" இலிருந்து மீள்விக்கப்பட்டது