உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

125

கண்மணி, உன் கருத்து என்ன? என்று என்னை அப் பெருமாட்டியார் வினாவினார்கள்.

66

“என் செல்வத்தாயே, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்’ போலப் போம் வழியில் நீங்கள் அவரைப் பார்த்தல் நலமாயிருக்கும் என்று யான் கொண்ட விருப்பத்தின் படியே தாங்களும் ஐயா அவர்களுங் கொள்ளலானது எனது நல்வினையே. நாளைக்கட்டாயம் அவருக்குத் தந்தி கொடுக்கவேண்டும்” என்று பெருங் களிப்போடு மொழிந்தேன்.

அதன் பிற் சிறிது நேரம் நான் இங்குள்ளவர்களிடத்தில் இன்னும் ஒரு திங்கள் வரையில் எவ்வளவு கருத்தாய் நடக்க வேண்டுமென்பதை வற்புறுத்திக் காட்டித் தாம் பம்பாய் போய்ச் சேர்ந்தவுடன் கடித மெழுதுவதாகச் சொல்லிவிட்டு, என்னை அணைத்து முத்தம் வைத்துக்கொண்டு பிரியா விடைபெற்று ஏகினார். ஏகுகையில், நாளைக்கு வண்டியேறப் போகும்போது ஒழிவு இருந்தால் எல்லாருமாய் வந்து சொல்லிக்கொண்டு போவதாகவுந் தேறுதல்கூறிச் சென்றார்கள். என்னை ஈன்றாள் இத்துணை அன்பாய் என்னிடம் இருக்கப்பெற்றேன் இல்லையே? என்னைப்பெற்றாள் என்னை வெறுத்து இங்குள்ள பாவிகளிடம் என்னைத் தள்ளிவிட்டிருக்க, அழகிய உயிர்ப்பாவையாய்த் திகழும் இப்பெருமாட்டியார் ஒன்றுக்கும் பற்றாத ஏழையேனைப் பெற்ற மகளினும் எத்தனையோமடங்கு மேலாக அன்பு பாராட்டி வரும் அரும்பெருந்தகைமையினை நினைந்து நினைந்து என் நெஞ்சம் நெக்குருகிப்போயிற்று.

“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”

என்ற பொய்யா மொழியின் படி எளியேனிடத்து ஏதொரு கைம்மாறும் எதிர்பாராமல் இவர்கள் செய்துவரும் இப்பேருதவிக்கு எழுபிறப்பெடுத்து நன்றி செலுத்தினாலும் அது போதாதே! ஐயனே, என் ஆரூயிர்க் காதலனே! இவர்களை நாளை அடிக்குந் தந்தியின்படி தாங்கள் அன்பு கூர்ந்து சிக்கந்தரபாத்தி லிருந்து வாடிச் சந்திப்புக்குச் சிறிது முன்னதாகவே வந்திருந்து இவர்களைப் பார்த்துச் சிறிது நேரமேயாயினும் மெய்யன்புடன் அளவளாவி, அவர்களிடம் விடைபெற்றுச் செல்லும்படி தங்கள் திருவடிகளில் தாழ்மையோடு பணிந்து கேட்டுக்கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/154&oldid=1582125" இலிருந்து மீள்விக்கப்பட்டது