உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

❖ LDM MLDMOELD -14

கரைகாணாத ஆழ்ந்த பெரு வெள்ளத்தில் அகப்பட்டு அமிழ்ந்திப்போகும் ஒருவன் தற்செயலாய் மிதந்துவந்து தன் கைக்கு எட்டிய சுரைக்குடுக்கை ஒன்றைப் பற்றிக் கொண்டு உயிர்தப்பலாம் என்ற நம்பிக்கை கொண்டு முயல்வது போல யானுஞ் சிறிது முயற்சியுடையவளாய் இருக்கின்றேன். முப்பழம் பிழிந்த சாற்றைக் கட்டுப்பாகோடு கலந்து ஒரு சிறு மதலைக்கு ஊட்டினாற்போலத் தாங்கள் எழுதுங் கடிதங்களில் உள்ள சொல்லும் பொருளுந்தளர்ந்த என் உயிரை இடையிடையே தளிர்க்கச் செய்கின்றன.

நேற்று மாலையில் இங்கே நடந்தவைகளைத் தங்கட்குத் தரிவித்தாலன்றி எனக்கு உறக்கம் வராது. நேற்றுச் சாய்ங்காலம் ஏழுமணிக்குக், கொடுங்குணங்கட்கு இருப்பிடமான என் தந்தையும் கொடியள் அல்லளாயினும் சொல்வோர் சொல்லைக் கேட்டு நடக்கும் இயல்பன்றித் தானே எதனையும் ஆராய்ந்து பார்க்கத் தெரியாத என் அன்னையும், நுண்ணறிவும் என்பால் அன்பும் மிக்க என் தங்கையும் இங்கே வந்தார்கள். வந்தவர்கள் என்னுடன் நிரம்ப அளவளாவிப் பேசாமல் சமையற்கட்டுக்குள் நுழைந்து என் மாமி நாத்துணாரோடு மிக மறைவாய்ப் பேசிக் காண்டிருந்தார்கள். அவர்கள் அங்ஙனம் இருக்க, அருமையிற் சிறந்த என் தங்கையோ என்னை மிகவும் அன்போடு கட்டிக் கொண்டு, என்னோடு மெத்தைமேல் வந்தாள்.

“கண்மணி, உன்னை அடிக்கடி காணக்கூடாத தீவினை யுடையவளானேனே! அம்மாவும் அப்பாவும் என்னை நமது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகாமல் ஒரே ஒட்டாரமாய் இருக்கின்றார்களே; அது போகட்டும்; உன்னையாவது என்னிடம் அடிக்கடி அனுப்பி வைக்கின்றார்களா வென்றால் அதுவு மில்லை. நம் பெற்றோர்கள் எவ்வளவு கல் நெஞ்சம் உடையவர் களாயிருக்கிறார்கள்!” என்று வருந்திக் கூறினேன்.

66

ஆமா, அக்கா, நம் அம்மாவையாவது ஒருபங்கு சேர்த்துக் காள்ளலாம். நம் அப்பாவோ ரொம்பப் பொல்லாதவராயிருக் கிறார். உன் பேச்சையாவது பெயரையாவது எடுத்தால் பாம்பு போற் சீறிவிழுகிறார். அவரைப்பார்த்தால் எனக்குச் சொல்ல முடியாத அச்சம் வருகிறது. அடுத்த ஆத்துக்காரப் பையன் தெய்வ நாயகத்திற்கு நீ காகிதம் எழுதினதைப்பற்றியே அப்பா முன்னெல்லாம் எரிச்சலோடு பேசிக்கொண்டிருந்தார். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/157&oldid=1582129" இலிருந்து மீள்விக்கப்பட்டது