உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

129

இப்போது சிலநாளாக, ‘அந்தக் கிழப்பயல் இந்தப்பாழும் முண்டச்சி கையில் நாற்பதினாயிரம் ரூபாவும், இந்தப்

பறைப்பயல் கையில் நாற்பதினாயிரம் ரூபாவுங் கொடுத்துவிட்டு ஒழிந்தானே!” என்று உன்னையும் நம் அண்ணாவையும் வாயில் வந்தபடியெல்லாம் திட்டுகிறார்! அவர் வையும் வசவுகளைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை! யாது செய்வது!” என்றாள்.

66

செய்யத்தக்கது ஒன்றுந்தோன்றவில்லை! அம்மா, அப்பா வுடைய ய நல்லெண்ணத்தை இனி நான் பெறுதற்கு வழி இல்லை! அது போகட்டும்; இன்னும் ஏதாவது என்னைப்பற்றி அம்மா அப்பா பேசிக்கொண்டார்களா?” என்று கேட்டேன்.

66

ஒவ்வொருநாளும் இரவில் நான் தூங்கின பிறகு அம்மாவும் அப்பாவும் என் காதுக்குக் கேளாதபடி குசுகுசு வென்று என்னென்னமோ பேசின படியாகத்தான் இருக்கிறார்கள். என்னாற் கூடியமட்டும் நான் தூங்குவதுபோல் இருந்து உற்றுக் கேட்டுப் பார்த்தேன்; ஆனால், ஒருநாள் அவர்கள் பேசிக் கொண்டு வந்ததில் முன்னும் பின்னுங் கேட்கவில்லை; நடுவே சொன்னது மட்டும் நினைவிலிருக்கிறது ‘யமகாதகப்பயல் ஒருவனை அனுப்பியிருக்கிறேன் உடனுக்குடன்.... தெரிய வருகிறது....மலைக்காட்டுக் குகையில் அடைத்து.... வழியாய் வாங்கிக்கொண்டு...விடலாமா?' என்று அப்பா சொல்லியவற்றில் நடுநடுவே சில பேச்சுகள் கேளா விட்டாலும் கேட்டது இம்மட்டுத்தான். இதைக்கேட்டதும் அம்மா பரபரப்பாய் அப்படி வேணாம்! தொகை மட்டும் நம்மகைக்கு வந்தாற் போதும்' என்று சிறிது உரக்கச் சொன்னாள். அதற்கு ‘நல்லது பார்ப்போம்' என்று அப்பா சொன்னார் இவ்வளவுக்கு மேல் எனக்கொன்றுந் தெரியாது” என்று நினைவிலும் உண்மையிலுஞ் சிறந்த என் அருமைத்தங்கை எடுத்துச் சொன்னாள்.

இந்தச் சொற்களைக் கேட்டது முதல் என் உள்ளம் ஒருநிலைப் படாமற் கலங்கியது. என் தந்தையார் எனது பொருளைக் கவர்ந்து கொள்ளும்பொருட்டு ஏதோ ஒரு பெரும் பொல்லாங்கான சூழ்ச்சியைச் செய்துவருகிறார் என்றும் எனது உயிருக்கே கேடு சூழுகிறார் என்றும் அறிகின்றேன். எனது பொருளையும் எனது உயிரையும் இழந்து விடுவதற்காக நான் மிகவுங் கலங்கவில்லை; எனக்கு உதவி செய்துவரும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/158&oldid=1582130" இலிருந்து மீள்விக்கப்பட்டது