உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

❖LDMMLDMOшILD -14❖

அருமைத்தமையனுக்கும், என்னோடு ஒன்று கூடி வாழ்தற்கு உரிய தங்களுக்கும், இப்போது எனக்கு உண்மைத்தாய் தந்தையராய் இருந்துவரும் அப்பாரசிகப் பெருமான் பெருமாட்டியாருக்கும் ஏது தீங்கு இழைக்க முயன்று வருகின்றாரோ என்பதை நினைக்கையில் என் நெஞ்சம் பெரிதும் நடுங்குகின்றது! எல்லாம்வல்ல கடவுளின் அருளால் அன்றித் தீயோர் செய்யும் சூழ்ச்சிகளுக்குத் தப்பிப்பிழைக்க ஏதொரு வழியுங் காணேன்; அவன் அசைத்தாலன்றி அணுவும் அசையா தாகையால் அவன் துணையையே நம்பி, நம்மால் இயன்றமட்டும் நாம் விழிப்பாய் இருக்கவேண்டும். தங்களிடம் நண்பன் போல் வந்திருக்கும் பார்ப்பன இளைஞனைப்பற்றியே எனக்கு ஓயாமல் ஐயம் உண்டாகின்றது.யான் எழுதிய கடிதங்களிற் சிலவற்றைத் தாங்கள் அவனுக்கு முன்னே காட்டினீர்கள் என்பதைத் தங்கள் கடிதத்தால் அறிந்தநாள் முதல் என் மனம் சிறிதும் அமைதி பெறவில்லை. இப்போது தங்கள் கடிதங்களைத் தாங்களாகவே காட்டப்புகுந்தாலும் அவன் காண்பதில்லை என்றும், எப்போதும் பலவகையான முயற்சிகளிற் கருத்தாய் இருப்பதல்லாமல் தங்கள் அலுவல்களில் அவன் சிறிதும் தலையிடுவதில்லையென்றும் அவனுடைய செய்கைகளை எவ்வளவு ஊன்றிப் பார்த்தாலும் அவனிடத்திற் கள்ளங் கவடு இருப்பதாகத் தினையளவுந் தோன்ற வில்லை யென்றுந் தாங்கள் எழுதியிருப்பதொன்றேனும் என் மனத்திற்கு இசையவில்லை; ஏனென்றால்,

“தொழுத, கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து’”

என்று மெய்ந்நூலாகிய திருக்குறள் கூறுவதொன்றே, அவனைப் பற்றித் தாங்கள் எழுதுவனவற்றைக் காணும் போதெல்லாம் என் நினைவிற்கு வருகின்றது, 'ஒருவனை அனுப்பியிருக்கின்றேன்... உடனுக்குடன்... தெரியவருகிறது’ என்று என் தந்தையார் சொல்லிய சொற்கள் இந்தப் பார்ப்பன இளைஞனையே சுட்டுகின்றன; இவனைக் கொண்டே தங்கட்கும் எனக்கும் இடையில் நடப்பன வற்றையெல்லாம் என் தந்தையார் தரிந்து கொள்ளுகிறார் என்று

கருதுகின்றேன். கல்வியறிவில் மிகச்சிறந்தவரான தாங்கள் அவனை அத்தனை எளிதில் நம்பிவிடக்கூடாதென்று வலியுறுத்துகின்றேன். இனிமேலாயினும் நீங்கள் நிரம்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/159&oldid=1582131" இலிருந்து மீள்விக்கப்பட்டது