உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

131

விழிப் பாயிருப்பதோடு, அப்பையனை அகற்றி விடுவதற்கும் முயற்சி செய்வீர்களென்று நம்புகின்றேன். என் தங்கை எடுத்துக் கூறிய சொற்கள் இப்போது நடக்கும் சூழ்ச்சிகளைக் குறிப்பாகத் தெரிவிக்கும் பொருட்டுக் கடவுளே அவளுக்குத் தெரியும்படி செய்தன ரென்று நம்புகின்றேன். தாங்கள் எனக்கெழுதும் அடுத்த கடிதத்தில் அவனைத் தங்களிடம் வராமல் அகற்றிவிட்ட செய்தியை ஆவலோடு காணலாம் என்று நம்பியிருக்கின்றேன்.

யானும் என் தங்கையும் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தி லெல்லாம் என் அன்னை என்னையுந் தங்கையையுங் கீழே வரும்படி கூவி அழைத்தாள். யாங்கள் உடனே கீழிறிங்கி வரவே, அப்போது வாய்நிறைய வெற்றிலைபாக்கு இட்டு மென்று கொண்டிருந்த என் தந்தையார் வாயை நிமிர்த்திக் கொண்டு "கோகிலா, இப்படி வந்து எங்கள்கிட்ட உட்காரு” என்று எச்சில் குழம்பிய நாவோடு கூறினார். அங்ஙனமே நான் பணிவோடு இருந்த பிறகு, வாய்நிரம்ப இருந்த எச்சிலைத் துப்பிவிட்டு வந்து, வாயை மென்றுகொண்டே, “என்ன கோகிலா, உன் மாமனார் உனக்கு எழுதிவைத்த நாற்பதினாயிர ரூபா சொத்தையும் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். இதற்கு விடையாக, என் மாமனார் இறந்து போவதற்கு முன் என்னை நோக்கி அந்தச் சொத்தை பயன்படுத்தும்படி சொல்லிய சொற்களையெல்லாம் எடுத்துரைத்தேன்; மாமனார் எனக்குக்கூறிய சொற்களில் தங்களைக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் யான் சொல் வில்லை. அமைதியாகப் பேசிய என் சொற்களைக் கேட்ட அவர் என் மேல் அன்புள்ளவராயும் பொருளிற் பேரவா இல்லாதவராயும்

ருந்தால் எவ்வளவோ மனமகிழ்ந்திருப்பார்! ஆனால் அவர் என் சாற்களைக் கேட்டு மனம் மகிழாமையோடு மிகுந்த சினக் குறிப்பு உடையவராகவுங் காணப்பட்டார். எனக்கோ அவர் முன்னிலையில் உள்ளம் நடுங்கியது! ஆனால், அவர் தமது சினத்தைக் காட்டாமல் அமைதியுடைவர்போல் “கோகிலா, நீ சொன்னதொன்றும் என் மனத்திற்குப் பிடிக்கவில்லை; தான தருமங்கள் செய்ய அந்தச் சொத்தை உபயோகிக்கப்போகிறேன் என்கிறாய். தான தருமங்கள் யாருக்கு யார் செய்ய வேணுமென்று உனக்குத் தெரியுமா? பிராமண குலத்திற் பிறந்தவர்களுக்கே மற்றச் சூத்திர சாதியிற் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்யவேணுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/160&oldid=1582132" இலிருந்து மீள்விக்கப்பட்டது