உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் -14

யல்லாமல், பிராமணர்கள் மற்றவர்களுக்கு எவ்விதமான தான தருமங்களும் செய்யக்கூடாது. பிராமணர்களே இந்தப் பூலோகத்திற்கு தேவர்க ளென்று சொல்லப்படுவார்கள். இந்தப் பூலோகத்தில் சகல சுகங்களையும் அனுபவிக்கும் பாத்திதை உண்டு. மரணாந்தத்திலும் இவர்களுக்கு மாத்திரமே சுவர்க்கம் உண்டு. பிராமணர் அல்லாத மற்ற எல்லாச் சாதியாரும் சூத்திரர்கள் ஆவர்கள். சூத்திரர்கள் என்றால் மூடர்கள் அல்லது அடிமை வேலை செய்பவர்கள் என்று அர்த்தம். பிராமணருக்கு மற்றச் சூத்திரச் சாதிப்பயல்களெல்லாம் தூர இருந்து அடிமை வேலை செய்து பிழைக்க வேண்டும். மற்றச் சாதியாருக்கும் மிருகங் களுக்கும் ஏதொரு வித்தியாசமும் இல்லை. மிருகங்கள் வியாதி யினாலும் பசியினாலும் துன்பப்பட்டால் அவற்றிற்கு எவரேனும் உபகாரம் செய்வதுண்டோ? அதுபோலவே சூத்திரக்கழுதைகள் வியாதியாலும் பசியாலும் துன்பப்பட்டு அழிந்தால் அவர்களுக்கு நாம் உபகாரஞ் செய்வது கூடாது. சூத்திரன் ஒருத்தன் தாகத்தால் பிராணன் போகிறதென்று அழுதாலும் அவனுக்கு ஒருவாய் ஜலங் கூடக் கொடுக்கலாகாது; காடுத்தால் நமக்குப் பாபம் வரும். அது நிற்கட்டும். ஏதோ திராவிட பாஷைக்கு உதவி செய்ய வேண்டுமென்றுசொன்னாயே; தமிழ் சூத்திரர்களுக்கும் பள்ளுப்பறை முதலான சாதியார்க்கும் உரியதேயல்லாமல் தேவகுலத்திற் பிறந்த பிராமணாளான நமக்குக் கொஞ்சமும் உரிய தல்ல. நமக்கு உரியது தேவபாஷையாகிய சமஸ்கிருதமேயாகும். அதைத்தான் நாம் படிக்க வேணும்; அதைத்தான் நாம் அபிவிர்த்தி செய்ய வேணும். சூத்திரரும் மற்ற ஈன சாதியாரும் அதனைப் படிக்கவே கூடாது; அதனை அவர்கள் காதில் கேட்கும்படி நாம் உரத்துப் படிக்கவுங் கூடாது; சமஸ்கிருதப் படிப்புக்கு அல்லாமல் சூத்திர பாஷையாகிய தமிழுக்குப் பிராமணாள் எள்ளளவும் உபகாரஞ் செய்யக்கூடாது. அது நிற்கட்டும். தேவார திருவாசகங்கள் படிக்கவேணும், அவைகளைப் படிப்பவர்க்கு உபகாரஞ் செய்ய வேணும் என்று சொன்னாயே. இந்தப் பாட்டுகள் யாருக்குச் சொந்தம்? உனக்குத் தெரியுமா? சூத்திரர் சாவுக்குக் கிரியைகள் செய்யும் சூத்திரப் பண்டாரப் பயல்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் பாடும் பண்டாரப் பாட்டுகளைச் சில படித்த சூத்திரப் பயல்கள் தேவாரம் திருவாசகம் என்று கௌரமாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அந்தப் பாட்டுகளில் பாடியிருக்கும் சிவன்

ஈன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/161&oldid=1582134" இலிருந்து மீள்விக்கப்பட்டது