உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

133

சூத்திர தேவதை, ஈன சாதியார்க்காக ஏற்பட்டவன். நம்முடைய வேதங்களில் சிவனைப் பற்றிய பிரஸ்தாபமே இல்லை. ஈன சாதியார்க்காக வியாசர் எழுதி வைத்த புரணாங்களிலேதான் சிவனைப்பற்றிய பிரஸ்தாபம் வருகிறது. பிரமணாளாகிய நாமோ சாட்சாத் பிரம்மஸ்வரூபம். நம்மைத் தவிர்த்துப் பிரம்மம் வேறேயில்லை. புராணங் களிலே சொல்லப்பட்ட தேவதைகளுக் கெல்லாம் மேலானதாகிய சாட்சாத் பிரம்மமே நாமாயிருப்ப தால் நாம் சிவனை வணங்குவது ரொம்பக் கேவலம். ஜகத் குருவாகிய சங்கராச்சாரிய சுவாமிகள் சைவம் முதலான ஷண்மதங்களையும் ஐயித்து நாமேபிரம்மம் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். ஏதோ கால வித்தியாசத்தால் சூத்திரப் பயல்களிற் சிலர்கள் படிச்சும், சிலர்கள் சம்பத் உடையவர் களாயும் இந்த மிலேச்ச ராஜாங்கத்தில் உயர்ந்து வருவதால் நம்மவர்கள் அவர்களுடைய தாட்சணியத்திற்காக வாயை மூடி க்கொண்டு இருக்கிறார்கள்;அப்படியிருந்தாலும் நம்மவர்கள் நம்முடைய காரியத்தில் கண்ணாய்த்தான் இருக்கிறார்கள். நீ சொன்னவை யெல்லாம் சுத்தப்பிசகு. நீ சூத்திரப் பயல்கள் எழுதிய சுவடிகளைப் படிச்சு இப்படியெல்லாம் பிதற்றினாய், உன் மாமனார் தள்ளாத கிழவர். அவர் மரணமாகுஞ் சமயத்தில் அவருடைய அறிவை மயக்கி நீ ஏராளமான சொத்தை அவரிடம் எப்படியோ வாங்கிவிட்டாய். புத்திப்பிசகால் அவர் செய்ததும் சொல்லியதும் பிராமணம் அல்ல. அந்தச் சொத்துக்கு என்ன வழி சொல்லுகிறாய்?" என்று வாய் ஓயாமற் பெருங் கூச்சலாய்ச் சடசடவென்று பேசிக் கடைசியாக என்னை அதட்டிக் கேட்டார். அவர் பேசியவை அனைத்தும் சொல்லவொண்ணாத வருத்தத்தை விளைவித்து என் நெஞ்சத்தைப் புண்படச் செய்தன. அவர் பேசிய வட மொழிகளையும் கொச்சைத் தமிழையும் அப்படியே எழுதினால் தங்கட்கு அருவருப்பாய் இருக்கும் என்று சில வடசொற்களை விட்டுச் சிலதமிழ்ச்சொற்களைத் திருத்தி எழுதி யிருக்கின்றேன். இவர் பேசிய வகை என்னை மிகவுந்திகைப்படையச் செய்து, பிறகு எனக்கு அச்சமுந் திகிலும் உண்டாக்கின. எதிரே என்னைப் பெற்ற தந்தையைக் காண்பதுபோல் அல்லாமல் எமனைப் பார்ப்பதுபோல் நடுக்கம் உற்றேன். பார்ப்பனர் அல்லாத மற்ற இனத்தினரையும், இனிய செந்தமிழ் மொழியை யும் தேவார திருவாசகத்தையும் சிவபெருமானையும் மட்டுக்கு மிஞ்சி மிகுந்த காரத்தோடும் இவர் இகழ்ந்து பேசிய சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/162&oldid=1582135" இலிருந்து மீள்விக்கப்பட்டது