உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

135

இப்போது யான் சிறிது பேசத்துணிந்து நடந்தவைகளை யெல்லாம் சுருக்கமாகத், தந்தை காரத்தோடும் தீய எண்ணத் தோடும் சொல்லிய பாங்கு புலப்படும்படி எடுத்துக் கூறினேன். இவற்றைக் கேட்ட என் தமையன் பெரிதும் உள்ளம் வருந்தி, "மாமா சொல்லிய நல்ல உபதேசத்தை, நீ கேட்டதன்மேல் கோகிலம் உனக்குச் சொன்னாளே தவிர, அவளாக ஏதொன்றும் சொல்லவில்லையே. அப்படியிருக்க நீ ஏன் அவள்மேல் வீணாக எரிந்து பேசவேண்டும்? மேலும், மாமா தாமாகவே சொத்து எழுதிவைக்கப் போவதாகச் சொன்ன பிறகுதான் அது கோகிலத்திற்குத் தெரியுமேயல்லாமல் அவள் மாமாவிடத்திற் பொருளைப்பற்றிச் சிறிதுங் கேட்டவளே அல்லள்; உண்மை அப்படியிருக்க அவள் மேற் பழிசுமத்தியது நல்லதன்று. மாமா சொல்லிய உபதேசமொழிகள் அத்தனையும் மிகச் சிறந்தவைகள். நம் பார்ப்பார இனத்தில் பெரும்பாலார் உண்மை தெரியாமல் பொறாமையால் இகழ்வதுபோல் நீயும் தான தருமங்களையும் மற்ற சாதியாரையும் தமிழையும் தேவார திருவாசகங்களையும் சிவத்தையும் இழிவாய்ப் பேசிவிட்டாய். மாமா எவ்வளவோ படித்தவர் எவ்வளவோ ஆராய்ந்துபார்த்தவர் எவ்வளவோ அனுபவம் உடையவர் அவர் சொல்லியவைகளை யெல்லாம் நீ தாழ்வுபடுத்திப் பேசியது ஏற்குமா?” என்று என் மனம் குளிரவும் என் தங்கை முகம் மலரவும் தந்தை மனம் எரியவும் மாமி நாத்துணார் முகம் நாணவும் என் தமையன் சுருக்கமாகவும் நன்றாய்ப் பதியும்படியாகவும் என் மாமனார் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டு எல்லா வகையிலும் உயர்ந்தவராய் விளங்கினமை யால் அவர் சொல்லியவற்றை மறுத்துப் பேசினால் தமது பேச்சு ஏறாதென்பதை தெரிந்த தந்தையார் என் மாமனார் சொல்லிய வற்றை மறுத்துக்கூற மனந்துணியாமையால், “உன் மாமனார் பெரியவர் தாம், அவரை யாருந் தாழ்வாகப் பேசவில்லை; ஆனாலும் அவர் தமது நிலை தப்பியிருந்த போது சொல்லியவை களைப் பற்றி நாம் வாதாட வேண்டியதில்லை. அது போகட்டும்" என்று சொல்லி என் தமையனையும் என்னையும் நல்லது பண்ணிக் கொள்வார் போல, “ஏ சுப்ரமணியா, கோகிலம் ஒருத்திக்கு நாற்பதினாயிரம் ரூபா எதுக்கு? உன் தங்கைக்கோ கல்யாணம் ஆகவேண்டியருக்கிறது. ஸ்ரீதனம் ஐயாயிர ரூபாய்க்குக் குறைந்தால் வாங்கமாட்டோம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர் சொல்லுகிறார்கள். மாப்பிள்ளை பி.ஏ.க்குப் படிக்கிறான்; அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/164&oldid=1582138" இலிருந்து மீள்விக்கப்பட்டது