உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் -14

முடிந்ததும் பி.எல்லுக்குப் படிக்க வேணும். அவன் படிப்புச் செலவு முழுவதும் நாமே செய்யவேணும் என்று மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள்; இது வரையில் வந்து பெண் கேட்டவர்களில் இவர்கள் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் குற்றமில்லை; மற்றவர்கள் இருபதினாயிரம் பதினாயிரங் கேட்டார்கள்; இப்போது வந்த மாப்பிள்ளையை விட்டு விடலாகாது. யானும் உன் தாயாரும் மிச்சக்காலமுந் தள்ள வேண்டியிருக்கிறது; மற்றவர்கள் கையைப் பார்த்திராமல் நாங்கள் ஜீவனம் பண்ணுகிறதற்கு ஐயாயிர ரூபாவாவது வேண்டாமா?” என்று சொல்லுகையில் உடனே என் தமையன்,

66

‘ஏன்? நான்தான் இருக்கிறேனே. மாமா அவர்கள் என் மேல் அருள்கூர்ந்து எனக்கும் நிரம்பப் பொருள்கொடுத்திருக்கின்றார். அம்மாவுக்கும் உனக்கும் என்னென்ன வேண்டுமோ அவ்வளவுந் தந்து உங்களைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன். என் தங்கையின் திருமணத்திற்கும் நான் ஐயாயிர ரூபா தருகிறேன்; இதற்காகக் கோகிலத்தை ஏன் வருத்தப்படுத்த வேண்டும்?” என்று ஈகையும் அன்பும் வாய்ந்த என் தமையன் கூறினான். என் தங்கைக்காக யானும் பொருளுதவி செய்யக் கடமைப்பட்டிருத் தலைத் தெரிவிக்க வேண்டுவது கட்டாயமாகத் தோன்றினமை யால்,“யானும் என் தங்கையின் திருமணத்திற்காக ஐயாயிர ரூபா தருகிறேன்” என்று சொல்லினேன். எங்கள் இருவர் சொல்லிலும் தந்தையார் மன நிறைவு பெறாதவராய்,

66

.

'காலமெல்லாம் நாங்கள் உன் கையை எதிர்பார்த்து உன்னை அண்டிப் பிழைக்கமுடியாது. எங்களுக்கென்று ஒரு பதினாயிர ரூபாவாவது வேணும். ஆகையால், நீ ஓர் ஐயாயிர ரூபாவும் கோகிலம் ஓர் ஐயாயிர ரூபாவுங் கொடுத்தால் அதுகொண்டு எங்கள் காலந் தள்ளுவோம்" என்று ஆவலோடு சொன்னார்.எனக்கு அவர் கேட்ட தொகை கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது; ஆனால், என் தமையனுக்கு அது பிடிக்கவில்லை என்பது அவனது முகக்குறிப்பால் நன்கு புலனாகியது. ஆகையால், அவன் கூறும் விடை யை எதிர்பார்த்திருந்தேன்.

66

“அப்பா என் பணமெல்லாம் உன்னுடையதுதானே. நீ ஏன் இவ்வளவு வேறுபிரித்துப் பேசுகின்றாய்? உன்னுடைய கையில் தாகையிருந்தால் செலவாய்ப் போய்விடும். உன் செலவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/165&oldid=1582140" இலிருந்து மீள்விக்கப்பட்டது