உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

137

எவ்வளவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நான் தருகிறதற்குப் பின் வாங்கவில்லை” என்றான்.

அச்சொற்களால் என் தந்தையார் முகம் வேறுபட்டவராய் உடனே என்னை நோக்கிக் “கோகிலா, நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார்.

66

“அண்ணா கருத்துப்படியே என் கருத்தும்” என்றேன்.

அதற்கு அவர் அப்படியா என்று தலையை அசைத்து, 'நல்லது அது இருக்கட்டும்; பெரியவர் உனக்குக் கொடுத்த வ்வளவு சொத்திற்கும் உன் மைத்துனனே உண்மையான சொந்தக் காரன். இவ்வளவு பெருஞ்சொத்தை நீ சுவீகரித்துக் காண்டது ரொம்ப அநியாயம்; இவ்வளவும் நீ வைத்து கொண்டாலும் உனக்கு அது லபிக்காது. மேலும், அவனுக்கு அப்பெரியவர் கொடுத்திருக்கிற இருபதினாயிர ரூபாவும் அவனுக்குக் காணாது. அவனுக்குக் கல்யாணம் ஆகவேண்டி யிருக்கின்றது; தாயையுந் தமக்கையையும் ஜீவகாலபரியந்தம் வைத்துப் பாதுகாக்க வேண்டிய வனாயிருக்கின்றான்.ஆகையால், அவன் ஒரு பெரிய வியாபாரஞ் செய்ய உத்தேசித்திருக்கின்றான்; அவனுக்குச் சகாயமாக நானும் அவன்கூட இருந்து வியாபாரஞ் செய்யப் போகின்றேன். அதற்குக் குறைந்தது ஐம்பதினாயிர ரூபா முதல் வேண்டும்; ஆதலால், உனக்கு வந்த நாற்பதினாயிரத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டால், அவன் அதனை முதலாக வைத்துக்கொண்டு வியாபாரத்தைச் செய்து வருவான். நூற்றுக்கு அரைவட்டி வீதம் அந்த நாற்பதினாயிரத்திற்கும் மாசமாசம் வட்டிகொடுத்து விடுவான். உன்பணம் வேறிடத்திலிருப்பதை விட உன் மைத்துனனிடத்தில் இருப்பது ரொம்ப நல்லதல்லவா?” என்று கேட்டார்.

அவர் கேட்டதற்கு இணங்காமல் விடைசொன்னால் அவர் மிகவுஞ் சினப்பட்டுச் சீறுவாரே என்று அஞ்சி என் தமையன் முகத்தை நோக்கினேன். எனது இடைஞ்சலை அறிந்து உடனே அவன் “அப்பா, மாமா அவர்கள் கோகிலத்திற்கு எழுதிவைத்த சாத்தை அவள் முழுதுந் தன் விருப்பப்படி செய்யக்கூடாமல் சில கட்டுப்பாடுகள் செய்திருக்கின்றார். மாமா உயிரோடிருந்த போது முன் ஒருநாள் நீங்கள் அவரைப் பார்க்க வந்திருந்தது உன் நினைவிலிருக்கலாம். அந்த நேரத்தில் அங்கே வந்திருந்த அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/166&oldid=1582141" இலிருந்து மீள்விக்கப்பட்டது