உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -14

பாரசிக கனவான் மாமாவுக்கு மிக நெருங்கிய நண்பர். அந்தக் கனவானது கருத்தையொட்டியே கோகிலம், அந்தச் சொத்தைப் பயன்படுத்தவேண்டுமென்றும், அவரது மேற்பார்வையிலேயே அவள் அந்த சொத்தை அனுபவித்துவரல் வேண்டுமென்றும் மாமா தமது கருத்தை எழுதிப் பதிவுசெய்திருக்கின்றார். ஆகவே, அதனைப் பயன்படுத்தும் வகையில் கோகிலம் தனது விருப்பப்படி நடக்கக் கூடாதவளாய் இருக்கின்றாள்; ஆதலால், இவளை இதற்காகத் துன்புறுத்திப் பயனில்லை” என்று உண்மையை நன்றாக எடுத்துக் கூறினான்.

இதுகாறும் வாய்பேசாதிருந்த என் மாமி இதனைக் கேட்டதும் புலிபோற் சீறி “யார் சொத்துக்கு யார் அதிகாரி? தள்ளாத கிழவர் புத்திமாறியிருந்த சமயத்தில் இவாளிருவரும் எங்கள் சொத்தை மோசமாய்ப் பறித்துக்கொண்டு, இப்போது என்ன சட்டம் பேசுகிறார்கள்! இது தெய்வத்திற்கு “அடுக்குமா! நியாய ஸ்தலத்திற்குப் போனால்தான் இவாள் மோசம் வெளியாகும். இவாளோடு வெறும் பேச்சு என்னத்திற்கு!” என்று

கூவிப்பேசினாள்

அதுகேட்ட என் தந்தை "ஏ சுப்பிரமணியா, இந்தச் சொத்து உங்களிருவருக்கும் லபிக்குமா என்பதைப் பிந்திப் பார்த்துக் கொள்வோம். இவ்வளவு தூரம் வந்தமட்டில் இனி நீ எங்களுடன் இருக்கத்தகாது, நாளைக்கே நீ வேறுவீடு பார்த்துக்கொண்டு உன் சம்ஸாரத்தை இட்டுக்கொண்டு போய்விடு. இனிமேல், கோகிலத்திற்கும் எங்களுக்கும் ஏதொரு சம்பந்தமுமில்லை” என்று சினந்து கூறினார்.

உடனே என் மாமியும் "இனி இவளும் இங்கேயிருக்கப் படாது,நாளைக்கே இவள் இந்த வீட்டைவிட்டு வெளியே போய் விடவேண்டும்” என்று ஆத்திரத்தோடும் அதிகாரத்தோடும் என்னைச் சுட்டிக் கூறினாள்.

என் தந்தையின் தொடர்பையும் மாமி நாத்துணார் தொடர்பையும் அறவே தொலைத்து விடுவதற்கு இசைவான ருகாலத்தை யானும் என் தமையனுஞ் சில நாட்களாக ஆவலோடும் எதிர்பார்த்திருந்தோ மாதலாற், கடவுள் செயலால் இவர்கள் வாயிலிருந்தே எங்களை வெளிப்படுத்துஞ் சொற்கள் பிறக்க, யாங்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சி உடையேமானோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/167&oldid=1582142" இலிருந்து மீள்விக்கப்பட்டது