உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

139

ஆயினும், அம்மகிழ்ச்சியை யாங்கன் புலப்படுத்தவில்லை. இவர்கள் சொல்லின் உண்மையை வலுப் படுத்தல் வேண்டி என் தமையன் “நீங்கள் கோபத்தாற் பேசுகிறீர்களா? அல்லது நாங்கள்

வெளியேதான் போகவேண்டு மென்று உண்மையோடு பேசுகிறீர்களா?” என்று வினவினான்.

66

இல்லை, இல்லை, நீங்கள் இருவரும் வெளியே போய்விட வேண்டியது அவசியந்தான்- இனிமேல் அரை நிமிஷம் நீங்கள் இங்கேயிருக்கப்படாது” என்று தந்தையும் மாமியும் சற்றேறக் குறைய ஒத்துப் பேசினார்கள்.

"நல்லது, நாளை மாலையில் நான் வெளியே வேறோர் இடம் பார்த்துக்கொண்டு போவதோடு என் தங்கை கோகிலத்தை நாளைக்கு இவ்வீட்டைவிட்டு வெளியே யான் அழைத்துச் சொல்வதுந் திண்ணம்" என்று என் தமையன் அமைதியோடு அழுத்தமாகச் சொன்னான். இச்சொற்களைக் கேட்டு என்னை ஈன்றவளும் என் அருமைத் தங்கையும் மட்டுங் கண்கலங்கினார்கள். என்றமையன் சடுதியிலெழுந்து “கோகிலா, நாளை மாலையில் நான் இங்கே வருகிறேன். நீ இந்த வீட்டை விட்டுப் புறப்படச் சித்தமாயிரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அவன் போனபின் என் தந்தை என் அன்னையை யுந் தங்கையையுங் கூட்டிக் கொண்டுபோனார். அவர்கள் போனபின் மேன்மாடத்தின் மேல் என திருப்பிடத்திற் சென்று நடந்தவைகளையெல்லாம் நினைந்து பார்த்துத் துயரமும் மகிழ்ச்சியுங் கலந்தநிலையிற் சிறிது நேரமிருந்தேன். வீட்டிலிருப்பது எனக்குப் பாழாய்த் தோன்றியது. தனக்குச் சொந்தமல்லாத ஒரு வேற்றிடத்தில் தனக்கு ஆகாதவர் கூட இருக்கும்படி நேர்வதைப் போல் துன்பமாவது பிறிதில்லை. ன்றிரவும் நாளைப்பகலும் எனக்கு ஓர் ஊழிகாலம் போல் இருக்கும். நாளை என் தமையனிருக்குமிடஞ்சென்றதுந் தங்கட்குக் கடிதம் எழுதுகிறேன்.

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/168&oldid=1582143" இலிருந்து மீள்விக்கப்பட்டது