உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

கடிதம் - 13

என் உள்ளக் கமலத்தில் ஓவாது அமர்ந்திருக்குந் தெய்வமே, முற் கடிதத்தில் யான் குறிப்பிட்டபடியே என் அருமைத் தமையன் தான் புதிதாய்க் குடிபோன இருப்பிடத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு போம்பொருட்டு நேற்று மாலையில் வந்தான். கொடுஞ் சிறையில் அடைபட்டுக்கிடந்த ஒருவன் தான் அதிலிருந்து விடுதலை பெறுங்காலம் இதுதானென்று திண்ணமாய்த் தெரிந்த பிறகு அதனைச் சொல்லுக்கு அடங்கா ஆவலோடும் ஐயுறவோடும் எதிர்பார்த்திருத்தல் போல, யானும் என் தமையன் வரும் மாலைப் பொழுதை எதிர்நோக்கியிருந்தேன். அவ்விடத்தைவிட்டு நீங்குதற்கு அமயம் வாய்த்ததை உன்னி றைவனைத்தொழுது அவனுக்கு நன்றி செலுத்தும் மகிழ்ச்சியின் இடையிடையே, ஒருகால் என் தமையன் என்னை அழைத்துக் கொண்டு போகக் கூடாவாறு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் என்செய்வது என்னும் ஐயுறவுந் தோன்றி என்னை மிகவுந் துன்புறுத்தியது. இங்ஙனம் யான் தவித்துக் கொண்டிருந்த பொழுதில், என் தமையன் வரவே, கட்புலனாகாக் கடவுளைக் கட்புலனெதிரே கண்டாற்போல என்னை மறந்த களிப் புடையவள் ஆனேன். அந்த வீட்டிலிருந்து யான் என்னுடன் எடுத்துப் போகவேண்டுவது ஒன்றுமில்லாமையால் யான் புறப்படுவதற்குச் சித்தமாய் இருந்தேன். அன்பிற் சிறந்த என் L மாமனார் காலமான பிறகு, எனது உணவையும் யானே மெத்தை மேல் யானிருந்த அறையில் ஆவியடுப்பிற் சமைத்து வந்தேன். எனக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் மற்றையவும் என் தமையனே அடிக்கடி கொணர்ந்து கொடுத்துவந்தான். அதுவல்லாமலும், அந்தப் பாரசீகப் பெருமாட்டியார் என் செலவிற்காக என் மாமனார் இறந்த மறுநாளே, இருநூறு ரூபா என் தமையன் வழியாக எனக்கு அனுப்பியிருந்தார். ஆகவே, என்னுடைய புத்தகங்கள் சிலவும் என் ஆடை அணிகலன்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/169&oldid=1582144" இலிருந்து மீள்விக்கப்பட்டது