உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

141

சிலவும் அடங்கிய ஒருசிறு கைப்பெட்டியை மட்டுங்கையில் எடுத்துக் கொண்டு கீழ் இறங்கி மாமி நாத்துணாரிடம் அதனைத் திறந்து காட்டிவிட்டுப்போவதற்கு விடைகேட்டேன்.பெட்டியைத் திறந்துகாட்டியபோது மட்டும் அதனுள்ளேயிருந்தவற்றைக் கருத்தாய்ப்பார்த்த அவர்கள் தமக்கு உரியது ஏதும் அதனுள் இல்லாமை கண்டு மனம் நிறைந்தவர்களாய் என்மேல் அருவருப் போடு ஒன்றும் பேசாமற் சமயற்கட்டுக்குட் போய்விட்டார்கள். வாய்ப்பேச்சுக்கூடப் பேசாமல் அவ்வளவு கொடுமை பாராட்டிச் சென்ற அவர்களது இல்லத்தில் நமக்கு என்னவேலை!” என்று என் று தமையன் குறிப்பிக்க, யான் அவனோடு தெருவாயிலண்டை வந்தேன்; வெளியே சென்றிருந்த என் மைத்துனனும் அப்போது உள்ளே வந்தவன் நான் அவ்விடத்தை விட்டுச் செல்வதைப் பற்றி சிறிது வருந்தினான். அவன் எங்களுடன் வருந்திப் பேசிய ஒலி கேட்டவுடனே உள்ளேயிருந்த மாமியும் நாத்துணாரும் அவனை அதட்டிக் கூப்பிட்டார்கள். நாங்கள் உடனே “போய் வருகின்றோம்' என்று அவனிடம் சொல்லிவிட்டு வண்டியிலேறிப் புதியவீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

இவ்வீடு இச் ச்சென்னை மாநகரத்திற் குடிமக்கள் தோட்டத்திற்கு (People's park) மேலண்டைவாடையில் உள்ள சாலையில் அமைந்திருக்கின்றது. மேல்மாடம் உள்ளது. மிகப் பெரிதல்லா விடினும் அழகிதாயிருக்கின்றது.மேல்மாடத்திலிருந்து பார்த்தால் குடிமக்கள் தோட்டத்தினுள் உள்ள மரஞ்செடி கொடிகளும் பிறவும் நன்றாய்த் தெரிகின்றன. மேன் மாடத்தில் தனியேயிருந்து படிக்கவுங் கடவுளை வணங்கவும் இஃது ஏற்றதாயிருக்கின்றது. எனக்கு இன்றியமையாது வேண்டிய எல்லாவசதிகளும் என் அருமைத் தமையனால் செவ்வையாக அமைக்கப்பட்டிருந்தன. எனக்கு வேண்டியது ஏதேனும் இருந்தால் அதனையான் வாய் திறந்து சொல்லுமுன் குறிப்பால் அறிந்துகொண்டு அதனை என் அன்புருவான தமையன் உடனே வருவித்துத் தருகின்றான். என் அன்பிற் சிறந்த மாமனாரோடு யானிருந்த போது அடைந்த பெரு மகிழ்ச்சியைச் சென்ற ஒரு திங்களுக்கு மேல் இழந்து போன யான் திரும்பவும் அதனை இப்போதுதான் பெறலானேன்.

இவ்வீட்டிலுள்ளவர்கள் என் தமையனைத் தவிர, அவன் மனைவியும் அவளுக்குப் பாட்டி முறையில் உள்ள ஒரு கிழவியுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/170&oldid=1582145" இலிருந்து மீள்விக்கப்பட்டது