உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் -14

தாம். இந்தக் கிழவி மிக நல்லவள், இன் சொல்லும் அமைதியும் உடையவள். என்னிடத்தில் நிறைந்த அன்புடையவளாய் இருக்கின்றாள். என் தமையன் மனைவியோ இன்னும் மங்கைப் பருவம் அடையாத ஒரு சிறு பெண். என் பெற்றோர்களை நான் விட்டுப்பிரிந்து என் மாமனாரிடம் போவதற்குமுன் ஓர் ஆண்டிற்கு முன்னேதான் இவளை என் தமையனுக்கு மணஞ் செய்வித்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் இவளை இவள் பெற்றோர்கள் அடிக்கடி தமது வீட்டிற்கு அழைத்துப் போய்விட்டமையாலும், இடையிடையே எங்களிடம் வந்திருந்த சில நாட்களும் என் அன்னை இவளை வீட்டுவேலையில் ஏவிக்கொண்டிருந்ததல்லாமல் என்னோடு நன்றாய்ப் பழகுவதற்கு

வள்

ங்கொடாமையாலும் யான் அப்போது இவளை நெருங்கிப் பழகுவதற்கு இசைவில்லாமற் போயிற்று. என்றாலும், அப்போதே இவளைப்பற்றி எனக்கு நல்லெண்ணமே இருந்தது. இப்போது இவளோடு நெருங்கிப் பழக மிக அமயம் வாய்த்ததுபற்றி மகிழ்கின்றேன். இவள் பெருஞ் செல்வர்வீட்டுப் பிள்ளை. இவள் தந்தையார் அரசியலில் உயர்ந்த அலுவலில் இருந்தவர்; அவர் இரண்டு ஆண்டுக்கு முன்னே தான் காலமானார்; அன்னையார் நிரம்ப அடக்கம் உள்ளவர், வெளியே அந்த அம்மையாரைப் பார்ப்பதே கிடையாது.கணவன் பிரிவாற்றாமை யால் மனத்துயரத்திலேயே மங்கியிருக்கின்றார். இவள் ஒரே பெண் ஆதலால் இவளிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டுகின்றார். இப்பெண்ணுடன் பிறந்த ஆண்பிள்ளைகள் மூவரும் மூத்தவர்கள்; இந்தப் பிள்ளைகளைப் பார்த்து மன ஆறுதல் பெற்று இவர்கள் பொருட்டாகவே உயிர்வாழ்கின்றனர். மூன்று நான்கு முறை இந்த அம்மையார் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னைப் பார்த்து ஒரு வகையில் மிக மகிழ்ந்தாராயினும் எனது நிலைமைக்காக மிக வருந்திக் கண்ணீர் உதிர்த்தனர். மங்கைப் பருவம் அடையும் முன் பெண் மக்களுக்கு மணஞ்செய்வது பெருந் தீமை என்பதனை நன்குணர்ந்தவர். இந்த அம்மையார் கட்டாயத் தினாலேயே தம் மகளுக்குப் பன்னிரண்டாவது ஆண்டில் மணம் நடைபெறலாயிற்று. இல்லையானால் ஐந்தாறு வயதிலேயே இவள் கழுத்திற் றாலியைக் கட்டியிருப்பார்கள். இவள் பெயர் கனகவல்லி; இவள் பெயரின் தன்மைக்குப் பொருத்தமாகவே இவளுடைய வடிவமானது பொன்னாற் செய்த பூங்கொடிபோல் அத்தனை அழகாக அமைந்திருக்கின்றது. என் தமையனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/171&oldid=1582146" இலிருந்து மீள்விக்கப்பட்டது