உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

143

க்கு

நல்ல இயல்புக்கு ஒத்த இவளை வளை மனையாளாக அவனு இசைத்து வைத்த இறைவன் அருளுக்கு யான் நன்றி செலுத்து கின்றேன். இவள் இசை பாடவும் வீணை வாசிக்கவுங் கற்பிக்கப்பட்டிருக்கிறாள்; ஆயினும் அவ்விரண்டிலும் இன்னும் நன்றாய்த் தேர்ச்சி அடைய வில்லை; சிறுபிள்ளையாதலால் இன்னும் ஆண்டு முதிர முதிர அவற்றில் நன்கு தேர்ச்சி பறுவாள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவளிடத்தில் எனக்குக் குற்றம்போல் தோன்றுவனவும் சில உண்டு. கல்வி கற்பதில் இவளுக்கு மிகுந்த விருப்பம் இல்லை. வீட்டு வேலைகளும் ஒன்றுமே செய்யத் தெரியவில்லை. எந்நேரமும் இசை பாடுவதிலேயே கருத்தாயிருக்கிறாள். இசையில் அவ்வளவு கருத்தா யிருப்பது குற்றமல்லாவிடினுங், கல்வியையும் வீட்டு வேலையையும் உன்னியாமையே குற்றமாக இருக்கின்றது. இதற்குக் காரணம் இவள் பெற்றோர்களே. இவள் தந்தையார் பெருஞ்செல்வராயும் அரசியலில் உயர்ந்த அலுவல் பார்த்த வராயும் இருந்தமையால் தாம் அலுத்துவந்து வீட்டிற்சேர்ந்த நேரங்களில் இனிய இசை கேட்டு இன்புறும் பொருட்டு இவளை இசையிலேயே பயிற்றி வந்தார். இவள் அன்னையோ தனக்கு இவள் ஒரே மகளாதல் பற்றி இவளிடத்தில் அளவுக்கு மிஞ்சிய அன்பு வைத்து இவளை விட்டு வேலையிற் பழக்காமல் வளர்த்து விட்டார்; மிகச்சிறிய வேலை முதல் மிகப் பெரியவேலை வரையில் எல்லாவற்றையுஞ் செய்தற்கு வேலைக்காரர் பலரை இவள் பெற்றோர்கள் ஏற்படுத்தி யிருந்தமையால் இவள் வீட்டு வேலையிற் பழகுவதற்கு இடமில்லாமலே போயிற்று. நமது உடம்பு ஓர் இயந்திரம் போல்வதாய் இருத்தலின் இதன் உறுப்புகள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் அசைந்து கொண்டிருத்தல் வேண்டும்; அசையாத இயந்திரத்தின் உறுப்புகள் துருவேறிப் பழுதாய்ப் போவது போலப் பல வேலைகளிலும் வருந்தி உழையாத ஒருவர் உடம்பின் உறுப்புகளும் இரத்த ஓட்டங் குறைந்து நரம்பு வலிவற்றுப் பழுதாய்ப் போகின்றன. உடம்பிற்கு உழைப்பு இல்லாமையால் இந்தப் பெண் உடம்பின் வளர்ச்சிக்கு வேண்டிய அளவு உணவு உண்பதில்லை; பிறர் கட்டாயத்திற்காகச் சிறிது கூட உண்பளாயின் அன்றைக்கெல்லாம் வயிறு செரியாமல் வருந்துவள், சில நேரம் வாயாலெடுப்பள்; அதனால் இவள் உட்கொள்ளும் உணவு சிறு குழந்தையின் உணவினுஞ் சுருங்கியது; செவ்வையான உடம்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/172&oldid=1582147" இலிருந்து மீள்விக்கப்பட்டது