உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

ம்

மறைமலையம் -14

வளர்ச்சிக்கு வேண்டிய உணவும் அது செரிப்பதற்கு வேண்டிய உடம்பின் உழைப்பும் இல்லாமையால் இவள் உடம்பில் இரத்த ஓட்டம் இருக்க வேண்டிய அளவுக்கு இல்லை; அதனால் பொன் போல் இருக்கத் தக்க இவளது உடம்பின் நிறம் சிறிது வெளிறிக் காணப்படுகின்றது; கன்னங்களிலுஞ் சிவந்த நிறம் இல்லை; உடம்பிற் சதை குறைவாய்ப் பஞ்சுபோல் இருப்பதால் திரண்டு உருண்ட கொழுமையில்லை. இயற்கையாகவே சிறந்த அழகு வாய்க்கப்பெற்ற இவள் கல்வியும் உடம்புழைப்பும் உடையவளாய் நடந்து வருவளாயின் அச்செயற்கையால் அவ்வழகு மேன்மேற் பெருகிச் சுடர்விரி பசும்பொன்போல் விளங்கும். இவளைப் பெற்றோர்கள் தாம் செல்வத்திலுஞ் சிறந்த நிலையிலும் மேம் பட்டிருந்ததை நினைந்து, தம் மக்கள் ஏவற்காரர் இல்லாமல் தாமாகவே வீட்டு வேலைகளைச் செய்தல் இழிவெனக் கருதி அவர்களை இங்ஙனம் வளர்த்து வைத்தது பெருந் துன்பத்திற்கே இடமாகின்றது.

பெண்பாலார்

நமது நாட்டிற் செல்வர்வீட்டுப் ஆண்பாலார் இருவருந் தமக்கு வேண்டிய வேலைகளைத் தாமேசெய்தல் தாழ்வென நினைந்து வெறுமனே காலங்கழித்தலி னாலன்றோ அவர்கள் கொடிய நோய்கள் பலவற்றிற்கு ஆளாகி ஆண்டு முதிரா முன்னரே கூற்றுவனுக்கு இரையாகின்றனர். செல்வர்களுக்கு வரும் நோய்கள், நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழை எளியவர்கட்கு வருகின்றனவா? இல்லையே. செல்வ மகளிர்கள் கருக் கொண்ட காலங்களிற் படுந்துன்பமும், அக்கருவை உயிர்க்க மாட்டாது, நண்பகல் வெயிலிற்பட்ட புழுப்போல் துடிதுடித்து உயிர்மாளுங் கொடுமையும் உடம்பு வருந்த உழைக்கும் ஏழைப் பெண் பிள்ளைகளிடங் காணப்படுவதுண்டோ? சிறிதும் இல்லையே. ஒருகால் தெய்வச் செயலால் வருந்திமகப் பெற்றாலும் அவர்கள் நீண்டநாள் உடம்பு தேறாது மருத்துவர் சொல்லும் மருந்துங் கையுமாய்த் துன்புற்று நாட்கழித்தலும், அவர் பிள்ளைகளும் அவர்களைப் போலவே நோய்ப்பட்டு வருந்துதலும் எத்தனையோ வீடுகளில் நம் கண்ணெதிரே நடந்து வருகின்றன. தம்மைச் செல்வரென்றும் மேல் நிலையில் உள்ளவரென்றும் இறுமாப்போடும் எண்ணி நடந்ததனால் அடையும் பயன் இதுதானா? பிழையான எண்ணத்தினால் தாம் துன்புறுவதல்லாமலும் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும்

ஈன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/173&oldid=1582148" இலிருந்து மீள்விக்கப்பட்டது