உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

145

கிப்

இங்ஙனமே கால்வழி கால்வழியாக நோய்வாய்ப்பட்டு நொந்து மாயும்படி செய்வதுஞ் செய்விப்பதும் எவ்வளவு பேதைமை! எவ்வளவு கொடுமை!! தாம் கொட்டாலுந் தம் பிள்ளைகளை யாவது சீர்திருத்தக் கூடாதா? பிள்ளைகளைக் காலையில் எழச்செய்து, காலைக்கடன்களை முடித்துத் தலைமுழு பூத்தொடுத்துச் சாந்து அரைத்து அரைத்து இறைவன் திருவுருவ அடையாளங்களுக்குத் திருமுழுக்குச் செய்வித்து அவற்றைச் சாத்தி அகில் புகைத்துக் கர்ப்பூரங் காட்டி, இறைவனைத்தொழுது பாட்டுப்பாடி வணங்கும்படி ஏவுதல் வேண்டும்; இங்ஙனங் கடவுளுக்குச் செய்யும் வழிபாட்டை ஆண் பெண் பிள்ளைகள் இருவருஞ்செய்தல் கட்டாயமாக வேண்டப்படும். இவ்வாறு செய்யாமற் செல்வர்வீட்டுப் பிள்ளைகள் காலையில் எட்டுமணி வரையில் தூங்கி எழுந்து பல்கூட விளக்காமல் ‘காப்பி”, “ரொட்டி’ என்று கூவுகின்றன. இத்தீய வழக்கத்தைச் செல்வர்கள் அறவே ஒழித்துவிடல் வேண்டும். கடவுளைத் தொழுதபின் பெண் மக்கள் சிறிது நேரமும் ஆண் மக்கள் மிகுந்த நேரமும் இருந்து கல்வி கற்றல் வேண்டும். பெண் பிள்ளைகள் வீட்டிலிருப்பவர்களா யிருந்தாற் காலையிற் கல்வி கற்ற சிறிது நேரம் போகப் பிறகு சமையற்றொழிலுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் திருத்தமாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவுஞ் செய்யக் கற்றுக் காள்ளல் முதன்மையாகும். உடம்பை நோய் அணுகாமற் பாதுகாத்து வளர்ப்பதற்குச் செவ்வையான உணவே இன்றியமை யாக் கருவியாய் இருப்பதனால் நாவிற்கு இனிமையும் உடம்பிற்கு நலமுந் தரும் பலவகை உணவுப் பொருள்களையும் கூறுபாடு அறிந்து சமைத்து வைத்தலைக் காட்டிலும் மேலான தொழில் பெண் மக்களுக்கு இல்லை. ஏனென்றால், உடம்பு செவ்வையான நிலைமையிலிருந்தால் தான் எல்லா நன்மைகளையும் அடையலாம்; ஆதலாற் சமையற்றொழிலைத் தாழ்வாக நினைத்து அதனை ஏவற்காரர்கையில் விட்டிருப்பது சிறிதும் விரும்பத் தக்கதன்று. இதனாற் பல தீங்குகள் உண்டாவதை வழக்கத்திற் பலரும் பார்த்துங் கேட்டுமிருக்கலாம். மேலும், சமையற் றொழிலை செய்யுங்கால் அடிக்கடி நிமிர்ந்துங் குனிந்தும் நடந்தும் உடம்பு பலவாறு அசைதலகல் உடம்பிலுள்ள எல்லா றுப்புக்களும் செவ்வனே அசைந்து இரத்தம் நன்றாய் ஓடவும் நரம்புகள் வலிவேறவும் அவற்றால் நன்றாய்ப் பசியெடுக்கவும் வேண்டுமளவுக்கு உண்ட

உணவு செரிக்கவும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/174&oldid=1582149" இலிருந்து மீள்விக்கப்பட்டது