உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

ன்

மறைமலையம் -14

உண்டாகின்றது; அதன்மேலும், நெருப்பண்டையிலிருத்தலால் உடம்பு நன்றாய் வியர்க்க, இரத்தத்திலுள்ள நச்சுப் பொருள்கள் உடனுக்குடன் வெளிப்பட அதுவுந் தூயதாகின்றது; இவற்றோடு உணவுப் பண்டங்களைப் பதம் அறிந்து ஒன்றுகலந்து இன்சுவைப்பட ஆக்கவேண்டி யிருந்தலால் அவ்வேலையில் முனைந்து நிற்கும் அறிவுங் கூர்மையாகின்றது. இங்ஙனம் பலவகையாலும் பெண் மக்களுக்குச் சிறந்ததாகக் காணப்படுஞ் சமையற்றொழிலை இகழ்ந்து கைவிட்டிருத்தலைக் காட்டிலும் வேறு தீமை பெண் பிள்ளைகளுக்கு யாது இருக்கின்றது? இனிச் சமையல் செய்து உணவெடுத்துச் சிறது களைப்பாறியபின் சிறிது தையல் வேலையிற் பழகி அதன்பின் அரிய பல நூல்களையும் வீணை முதலான இசைக் கருவிகளையும் கற்றலிற்கருத்து ஊன்றல் வேண்டும். இங்ஙனஞ் செய்தலை விடுத்து நம் நாட்டுப் பெண்பாலாரிற் பலரும் ஓய்வான நேரங்களில் அண்டைவீட்டுப் பெண்பிள்ளைகளை அழைத்து வைத்துக் கொண்டு வீணான ஊர்ப்பேச்சுப் பேசுவதிலுந் தாயம் ஆடுவதிலும், பிறரை வம்புக்கு இழுப்பதிலுந் தூங்குவதிலுந் காலத்தைப் போக்குகின்றனர்! செல்வர்வீட்டுப் பெண் பிள்ளைகளையும் ஏழை வீட்டுப் பண்பிள்ளைகளையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்தால் ஏழைப் பெண்மணிகளே மிக மேலானவர்களாய் இருக்கின்றார்கள். வயிற்றுக்கில்லாமையால் எளிய பெண்கள் நெல்லுக்குத்தியோ இல்லை தைத்தோ மா அரைத்தோ விறகு விற்றோ பிறர் இட்ட ழியஞ் செய்தோ தமது காலத்தை ஒரு நொடியும் வீணே கழியவிடாமல் தமக்கும் பிறர்க்கும் பயன் படும்படியான வழிகளிற் செலவிடுகின்றார்கள். இந்த இருதிறத்தவர் நிலைமைகளையும் எண்ணிப் பார்க்குங்கால் செல்வர்வீட்டு மாதர்கள் செல்வத்தாற் பெற்றபயன் சிறிதும் இல்லையென்பது புலனாகின்றதன்றோ? செல்வத்தைப் பெற்று இங்ஙனஞ் சீரழிவதைக் காட்டிலும், வறுமையிற் செம்மையாயிருத்தலே பன் மடங்கு சிறந்ததாய்க் காணப்படுகின்றது.

தள

என்பெருமானே, தாங்கள் எனக்கு அன்போடு எழுதிய கடிதங்கள் பலவற்றிற் படித்தல், எழுதுதல் யாழ் இசைத்தல் முதலான சில வேலைகளைத் தவிர வேறு வீட்டுவேலை எதுவும் மெய்வருந்தச் செய்யவேண்டாம் என்று தாங்கள் எனக்குக் கற்பித்திருந்தது என் மனத்திற்கு இசையவில்லை. தாங்கள் என் மேல் வைத்த நிறைந்த அன்பினால் அங்ஙனம் எழுதியதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/175&oldid=1582150" இலிருந்து மீள்விக்கப்பட்டது