உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

147

மகிழ்ந்தேனாயினும், மற்றைச் செல்வர்களைப்போல நீங்கள் இப்படி சொல்வது என் கருத்துக்கு இணங்கவில்லை;

அதனாலேதான் செல்வமாதர்கள் தமது காலத்தை எங்ஙனம் பயன்படுத்தல் வேண்டுமென்பதைப் மன்பதைப் பற்றி இவ்வளவு விரித்தெழுதி என் கருத்தைத் தங்கட்குத் தெரியப் படுத்தலானேன். யான் கல்வி கற்பதில் எவ்வளவு அக்கரையாய் இருந்தேனோ அவ்வளவு அக்கரையாய் வீட்டு வேலைகளையுஞ் சுருசுருப்போடு செய்து வந்தமையே காலஞ்சென்ற என் அருமை மாமனாருக்குப் பேருவப்பைத்தந்தது. சமையல் வேலை முதலாக எல்லா வீட்டு வேலைகளையும் என்னால் இயன்வரையிற் செவ்வையாகச் செய்து வந்தபோதெல்லாம் என் மாமனார் என்னைக் கண்டு மகிழ்ந்து இதுதான் பெண்மக்கட்கு அழகு!' என்று கூறிய மொழிகள் எனக்கு அவ்வுண்மையை நன்கு விளங்கச் செய்து மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணின. யானெழுதியவற்றிற் குற்றம் இருந்தால் அதனை எடுத்துக்காட்டி என்னைத் திருத்தும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் அருமைத் தமையன் மனைவியைப்பற்றிச் சொல்ல வந்ததில் இவ்வளவும் எழுதிவிட்டேன். என் அண்ணன் இவளுக்கு வீட்டுவேலை முழுதுங் கற்பித்துக் கொடுக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டிருக்கின்றான். இவளும் என் சொற்படி கேட்பவளாயும் என்பால் மிகுந்த அன்புடையவளாயும் இருக்கின்றமையால் இவளைத் திருத்துவது எனக்கு எளிதாகவே இருக்கும். என் அருமைத் தங்கை தனலட்சுமியை இனிக் காண்பதற் கில்லாதவாறு பிரிந்துவந்த எனக்கு இவளோடு கூடியிரு ருக்கப் பெற்றது பெருங்களிப்பாயிருக்கின்றது. ஆ! இப்போது தபாற்காரன் வந்து கதவைத் தட்டுகிறான்!

திரும்பவந்தெழுதுகிறேன்.

என் ஆரூயிர்ச் செல்வப் பெருமானே, இப்போது தபாற்காரன் கொண்டுவந்து கொடுத்தது தங்கள் அன்பு பொதிந்த கடிதந்தான். அதனுள் வரைந்திருந்தவைகளைப் படித்துப்பார்த்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.என்னை ஈன்ற அன்னையினுங் கோடி மடங்கு உயர்ந்த அந்தப் பாரசிகப் பெருமாட்டியாரையும், என் தந்தையினுங் கோடிதரஞ் சிறந்த அந்தப் பாரசிகப் பெருமானையும் அவர்கள் அருமைக் குழந்தைகளையுந் தாங்கள் வாடிச்சந்திப்பிற் போயிருந்து பார்த்து, மிக்க அன்போடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/176&oldid=1582151" இலிருந்து மீள்விக்கப்பட்டது