உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் -14

6

அளவளாவிப் பேசினமை அறிந்து பேரின்பக்கடலிற் றிளைத்தவளானேன். அவர்களைப் பற்றி தாங்கள் மிக உயர்ந்த எண்ணங் கொள்ளலானதுந். தங்களைக் கண்டு பேசியதில் அவர்களின் அகமும் முகமும் மலர்ந்து இன்புறலானதுந் தெரிந்து என் உள்ளங்கொண்ட மகிழ்ச்சியை எழுத வலிவற்றவளா யிருக்கின்றேன். ஆனால் மற்றும் ஒரு செய்தி எனக்குத் துன்பத்தைத் தந்து உடனே ஆறுதலையும் உண்டாக்கினது. அவர்களைத் தாங்கள் பார்க்கச் சென்றபோது சேதுராமன் என்னும் அந்தப் பார்ப்பனப்பையன் தங்களுடன் வரலானதுந் தாங்கள் அவர்களிடம் சிறிது பேசித்திரும்பியதற்குள் அவன் ம் தன்னைப்பற்றி அவர்கட்குத் தெரிவிக்கும்படி தங்களை அடிக்கடி கேட்கலானதுந்,தாங்கள் அவனைப்பற்றிப் பின்னுஞ்சிறிதுநேரம் பொறுத்துத் தெரிவிக்கலாம் என்று இருந்ததற்குள் அவன் தானாகவே தன்னைப் பற்றி அவர்களிடம் தெரிவித்துக் கொண்டதும் அவ்வாறு அவன் இடையே வலியப் புகுந்து அவர்களிடம் பழக்கஞ் செய்து கொள்ள முயன்றது அவ்விருவர்க்கும் அருவருப்பை விளைத்ததும், அவனது செய்கை தங்கட்குச் சிறிது வருத்தத்தையும் பெருமைக் குறைச்சலையும் தந்ததும் எனக்குத் துன்பத்தைத் தந்தன; ஆனாலும், அவர்கள் அவனிடம் முகங்கொடுத்துப் பேசாமல் தங்களிடமே பேசியதுந், தங்களை அப்பாரசிக கனவான் அருகழைத்துத் தங்கள் காதில் அவனைப்பற்றித் தமக்குநல்லெண்ணம் இல்லை யென்று தெரிவித்ததும் என் உள்ளத்திறகு ஆறுதலைத் தந்தன. இப்போது தான் தாங்கள் அவன் செய்கையில் ஐயுறவு கொள்ளத் தலைப்பட்டீர்கள். விரைவில் அவனைத் தங்களிடம் வராமல் நீக்கிக் கொள்வதறிந்தும் உவப்படைந்தேன். அது நிற்க.

பம்பாய்க்குச் சென்றபின் அப்பாரசிக அம்மை யாரிடமிருந்து எனக்கும் இன்னுங் கடிதம் வரவில்லை; அதனால், அவர்களுடைய குடும்ப ஏற்பாடுகளெல்லாம் நிரம்பக் குழப்பமான நிலைமையில் இருக்கின்றன என்று அறிகின்றேன். அந்தப் பாரசிகப் பெருமானின் தமையனார் காலமாயிருக்க வேண்டும்.எப்படியும் இன்னுஞ் சில நாட்களிற் கட்டாயங்கடிதம் வரும். அப்போது எல்லாம் விரிவாய்த் தெரியும். தங்கட்கும் அவர் எல்லாம் எழுதித் தெரிவிப்பார் என்று நம்புகின்றேன். இன்னும் நாலைந்து நாளில் மறுபடியுந் தங்கட்கு எழுதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/177&oldid=1582152" இலிருந்து மீள்விக்கப்பட்டது