உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

என் தாமரையே,

கடிதம் 14

-

மனத்தடத்தில்

மலர்ந்திருக்கும்

மணங்கமழ்

இன்றைக் காலையில் என் தமையன் மனைவியைப் பார்க்கும் பொருட்டு அவன் உறவினர் சிலர் வந்தனர்; அவர்கள் வந்தபின் சிறிது நேரத்தில் அவள் அன்னையும் வந்தனர். பார்க்கவந்தவர்கள் எல்லாரும் பெண்பிள்ளைகளே. எல்லாரும் முப்பத்தைந்திற்கு மேல் நாற்பதுவயதுக்கு உட்பட்டவர்கள். எல்லாருங் கணவரோடிருந்து வாழ்பவர்கள். கனகவல்லியின் அன்னையார் மட்டுங் கணவனை இழந்தவர்; ஆனாலும், என்னைப்போல் தலையிற் கூந்தல் வைத்திருக்கின்றார். நாங்கள் வந்தவர்களுக்குச் சய்ய வேண்டும் உபசாரங்களைச் செவ்வையாகச் செய்து அளவளாவிப் பேசிக்கொண்டிருக்கையில், வந்தவர்களில் ஓர் அம்மையார் வழக்கமாகப் பேசும் பேச்சுகளில் விருப்பம் இல்லாதவராய், அவர்கள் வரும் நேரத்தில் யான் படித்துக் கொண்டிருந்து மேசை மேல் வைத்துவிட்டுவந்த புத்தகத்தை எதிரேபார்த்து “அம்மா, கோகிலம் அதென்ன புஸ்தகம்? நாங்கள் வரும்போது நீ அதை ரொம்பக் கவனமாய்ப் படித்துக்கொண்டிருந்தாயே” என்று கேட்டார்.

அதற்கு நான் “அது திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கன் அடங்கிய திருமுறை” என்றேன். அதற்கு அந்த அம்மையார் ஒன்றுஞ்சொல்லாமற் புருவத்தை மேல்நிமிர்த்தித் தலையை அசைத்து வாயைக் குவித்து வலக்கையின் முன்விரல்களை மடக்கி வாய்மேல் வைத்தார். அவர் ஏதும்பேசாமல் வெறுப்போடுசெய்த அதனைக்கண்டு என் உள்ளம் வருந்தியது. சிலநாட்களுக்குமுன் என் தந்தையார் இங்ஙனமே தேவார திருவாசகங்களையும் எம்பெருமானையும் சைவ சமயத்தையும் மற்றச் சாதியாரையும் இழிவுபடுத்திப் பேசியதனால் உண்டான என் மனப்புண் இன்னும் ஆறாமல்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/178&oldid=1582153" இலிருந்து மீள்விக்கப்பட்டது