உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் -14

இருக்கையில் அதிற் கூரிய இருப்புக்கோலைக் காய்ச்சிநுழைத்த பான்மையாக இந்த அம்மையாரும் அத்தெய்வ அருணூாலைப் பற்றி யான் சொல்லிய சொற்களை அருவருத்தமை பெருந்துயரை விளைத்தது.எங்கள் பார்ப்பன இனத்தவரில் உள்ள ஆண்பெண் என்னும் இருபாலார்க்கும் இந்தப் பொல்லாத சாபக்கேடு இருப்பது இப்போது தான் எனக்கு நன்றாய்த் தெரிந்தது. இதனை நினைக்க நினைக்க என் மனம் நைந்து முகம்வேறுபட்டது. எனக்குண்டான வாட்டத்தை அறிந்த கனகவல்லியின் அன்னையார் எனக்கு ஆறுதல் உண்டாகும் பொருட்டுக்,

"குழந்தே, அந்த நூலின் அருமை இந்த அம்மாளுக்குத் தரியாது. பொதுவாக நம் இனத்தவர்கள். அந்த நூல்கள் சூத்திரர்களுக்குத்தாம் உரியவைகள்; பிராமணாளுக்கு வேதங்கள் மாத்திரந் தாம் சொந்தம்; அவர்கள் அவற்றைத் தவிர மற்றத் தமிழ் நூல்களை படிக்கப்படாதென்னும் ஒரு பொருந்தா நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதற்காக நீ வருத்தப் படாதே” என்று எனக்கு ஆறுதல் வரப்பேசினார்கள்.

ங்ஙனமே என் தந்தை பேசியபோது அவரை மறுத்துச் சால்லக்கூடாத நிலைமையில் அப்போதிருந்தேன். ஆனால், இப்போது நான் அப்படி வாயை மூடிக்கொண்டிருக்கக் கடமைப் பட்டவள் அல்லேன் என்பதை உணர்ந்துபார்த்து, எம்மினத்தவர் கொண்ட அறிவில்லாத நம்பிக்கையை மாற்ற விரும்பிப் பார்க்க வந்தவளோடு பேசுவதைப் பார்க்கிலும், என் அத்தையோடு இதனைப் பேசுதலே நலம் என்றெண்ணி ‘அத்தே, தமிழும் தமிழ் நூல்களும், சூத்திரர்களுக்கு மட்டுந்தாம் உரியவை என்று எந்தக் காரணத்தைக் கொண்டு நம்மவர் சொல்லுகிறார்கள்?” என்று

வினவினேன்.

அதற்கு அத்தையார் “நம் முன்னோர்களும் ஞானத்திற் சிறந்த ருஷிகளும் ஸமஸ்கிருத பாஷையைத்தான் பேசினார் களென்றும், அதிலேயே சகலசாஸ்திரங்களையும் எழுதி வைத்தார்கள் என்றும், கீழோர் பேசுந் தமிழ் முதலான பாஷைகளை அவர்கள் பேசவும் இல்லை. அவற்றில் வேதம் முதலான உயர்ந்த சாஸ்திரங்களை எழுதி வைக்கவும் இல்லையென்றும் நம்மவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் நூல்களிலும் படித்திருக்கின்றேன்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/179&oldid=1582154" இலிருந்து மீள்விக்கப்பட்டது