உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

151

அப்படியானால் அகத்திய முனிவரைப் பற்றித் தங்கள் கருத்து யாது?" என்று வினாவினேன்.

66

று

அவர் ருஷிகளில் தலைமை பெற்றவர் என்றும், அகிலலோக நாயகனான ஈசுரனுக்குச் சமமானவர் என்றும், சகல வேத சாஸ்திரங்களும் சொல்லுவதாக அறிந்திருக்கின்றேன் என்று அத்தையார் சொன்னார்.

66

'அப்படியானால், அவ்வளவு தெய்வத்தன்மை பொருந்திய அகத்திய முனிவர், 'பிரபுவாகிய சிவபெருமான் திருவருளினாலே தமிழ்மொழியாகிய திராவிடபாஷையை அமைத்தேன்' என்று அவர் தாமே சொல்லியதாக ஸ்காந்த மகாபுராணத்திற் சங்கரசங்கிதை உபதேசகாண்டம் எழுபத்தொன்பதாம் அத்தியாயத்தில் துலக்கமாகக் கூறப்பட்டிருக்கையில், முன்னிருந்த மகருஷிகள் தமிழைப்பேசவில்லை, அதில் நூல்கள் எழுதவில்லை யென்பது எப்படிப்பொருந்தும்?” என்று கேட்டேன்.

“அப்படியா அம்மா! எனக்கு இந்த உண்மை இதுவரையில் தெரியாது. தமிழுக்கு முதல் பரமாசாரியர் அகஸ்திய முனிவரா!” என்று வியந்து, யான் சொல்லியதற்கும் யான் சொல்லியதைக் கேட்டு விடைசொல்லத் தெரியாமல் வாய் மூடிக் காண்டிருக்கும் அப்பெண்பாலார் நிலைமைக்கும் மகிழ்ந்து கொண்டார் என் அத்தையார்.

L

இதற்குள் முதலில் என்னைக்கேட்ட பெண்பிள்ளை “நம் முன்னோர்களிற் பெரும்பாலார் தமிழ்ப்பேசவாவது அதில் நூல்கள் எழுதவாவது பிரியப்படவில்லையென்று அர்த்தம் பண்ணக் கூடாதோ?” என்று வினாவினாள்.

உடனே அதற்குநான் “திருவள்ளுவ மகருஷி திருக்குறள் என்னும் ஒப்பு உயர்வில்லாத் தமிழ்வேதத்தை அருளிச்செய்ய வில்லையா? மூவாயிரம் ஆண்டு தவம் இருந்த திருமூலமகருஷி திருமந்திரம் என்னும் அரிய ஞானசாஸ்திரத்தைத் தமிழிற் செய்தருள வில்லையா? இவ்விருவர்க்கும், சமஸ்கிருத வியாகரணஞ் செய்த பாணினிமுனிவர்க்கும் மிக முன்னேயிருந்த தொல்காப்பிய மகருஷி உலகத்தில் மற்றெந்தப் பாஷையிலுங் காணமுடியாத நுட்பங்களெல்லாங் கண்டறிந்து தொல்காப்பியம் என்னும் இலக்கண மகோததியை நமக்குத் தந்தருளவில்லையா? இந்தத் தொல்காப்பிய மகருஷி அகஸ்தியருக்குப் பிரதம சிஷ்யரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/180&oldid=1582155" இலிருந்து மீள்விக்கப்பட்டது