உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் -14

L

சில பழைய நூல்களால் அறிகின்றோம். வான்மீகர் மார்க் கண்டேயர் முதலான அருந்தவத்தோர்களுந் தலைச்சங்கத்தி லிருந்து தமிழ் ஆராய்ந்தார்களென்றும், அவர்களாலும் அக்காலத்திலிருந்த முனிவர்களாலும் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள் எண்ணிறந்த வாமென்றும் நாம் செவ்வையாக அறிகின்றோம். அது நிற்கட்டும். அவர்கட்குப் பிற் காலத்தில் நம் பார்ப்பனவகுப்பில் அவதாரஞ் செய்தருளிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்த திருவாசகத்தையும்,திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் அருளிச் செய்த தேவாரங்களையும் படித்துப பரவசப்பட்டுப் பத்தியால் மனங்கரையும் பேரின்ப அனுபவம் உடையவர்கள் தமிழைச் சூத்திர பாஷையென்றும் அதில் உயர்ந்த நூல்கள் இல்லை யென்றுஞ் சொல்ல மனந்துணிவார்களோ? சைவவேளாள இனத்தில் திருஅவதாரஞ் செய்த அப்பர் சுவாமிகளென்னுந் திருநாவுக்கரசு அடிகள் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்களைக் கேட்ட கல்லுந் கரையுமானால், அவற்றைக்கேட்டு நெஞ்சம் உருகாத நம் பார்ப்பனச் சாதியாரின் மனத்தை என்னென்று கூறுவேன்! திருநாவுக்கரசரின் தெய்வத்தன்மையை உணர்ந்தன்றோ திருஞான சம்பந்தமூர்த்தியும் அவரை வணங்கி 'அப்பரே' என்றழைத்தார்! அப் பூதியடிகள் என்னும் பிராமண

முனிவர் திருநாவுக்கரசு அடிகளிடத்தில் அளவுபடாத அன்புபூண்டொழுகி அவர் திருவடிகளைத் தொழுது அருள்பெற்ற உண்மைச் சரித்திரத்தை நம்மவர் அறியாதது அவர்தந் தீவினையே! மெய்கண்டதேவர் என்னும் சைவவேளாளக் குழந்தை வேதாகமங்களாலுங் கண்டறியப் படாத முடிந்த உண்மைகளையெல்லாங் கரைகண்டு தெளிவுபடுத்தி அருளிச் செய்த ‘சிவஞானபோதம்' என்னும் ஒப்புயர்வில்லா ஞான நூலினை நம்மவர் பெயரளவாகக்கூட அறியாதிருக்குங் கொடுமையை யான் என்னென்று

எடுத்துரைப்பேன்! இத்தெய்வக் குழந்தையின் அளவுபடா ஞானப்பெருமையினைத் தெரிந்தன்றோ, எல்லா வேதாகமங் களையுஞ் சிக்கறுத்துணர்ந்த சகலாகம பண்டிதர் என்னும் பிராமண முனிவர் தமதறிவையும் ஒருபொருளாக எண்ணாது சென்று அக்குழந்தையின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து, அப்பிள்ளைக்கு அடிமையாகி அதனால் உபதேசிக்கப்பட்ட சிவஞானபோதத்திற்கு உரையாகச் சிவஞானசித்தி என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/181&oldid=1582156" இலிருந்து மீள்விக்கப்பட்டது