உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

153

ஞான நூலை இயற்றியருளினார்! இன்னுந் தில்லைமூவாயிரம் பிராமணர் கட்குந் தலைவராய் விளங்கிய உமாபதி சிவனார் அருளிச் செய்த 'சிவப்பிரகாசம்' முதலான ஞானசாஸ்திரங் களை நம்மவர் உணராத தீவினை பெரிது! பெரிது!! இதுவரையில் நான் எடுத்துச் சொல்லிய அருந்தமிழ் நூல்களுக்காயினும் அவற்றை அருளிய முனிவர்கட் காயினும் ஒப்புயர்வு சொல்லத்தக்க சாஸ்திரங்களேனும் ஆச்சாரியர்களேனும் நமது சமஸ்கிருதத்திலும் இல்லை, வேறெந்தப் பாஷைகளிலும் இல்லையென்று காலஞ்சென்ற என் மாமனாரவர்கள் ஆராய்ந்து சொல்லப் பலமுறை கேட்டிருக்கின்றேன். ஆகையால், தமிழின் பெருமை அறியாது அதனை இழிவாய்ப் பேசுவது நம்மினத்தவர் தம்மைத் தாமே இழிவுபடுத்துவதாய் முடிகின்றது" என்று அழுத்தமாய்க் கிளர்ச்சியோடு பேசினேன்.

எங்களைக் காணவந்த இப்பெண்பிள்ளைகளில் எவருந் தமிழில் இவவளவு பெருமையிருக்குமென்று சிறிதும் அறிந்தவர் அல்லர். இவர்களுடைய அறியாமைக்காக நான் மிகவும் இரங்கு கின்றேன். இவர்களை இவ்வளவு குருட்டுத்தனமான நிலைமையில் வைத்துக்கொண்டு தாமுங் குருடர்களாய் குருட்டுக்கொள்கைகளிற் பிடிவாதமாய் நிற்கும் எங்கள் சாதி ஆண்மக்களே இவ்வளவுக்குங் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர் களாய் இருக்கிறார்கள். அது நிற்க, யான் மேற்சொல்லியவாறு பேசியவைகளைக் கேட்டு எல்லாருந் திகைத்திருக்கையில், என்னைக் கேள்விகேட்ட பெண் பிள்ளை மறுபடியுஞ் சிறிது காரம் உடையவளாய்,

.

“நீ சொல்லியதெல்லாஞ் சரிதான், தமிழ்வேதம் என்று சொல்லுந் திருக்குறளைச் செய்தவர் ஒரு வள்ளுவப் பறையராமே?" என்று கூறி, யான் சொல்லிய மற்றவைகளை யெல்லாம் விட்டு விட்டு திருவள்ளுவ நாயனார் பிறப்பைக் குறித்து இழிவு சொன்னாள்.

“நல்லது அம்மா, அவர் யாருக்குப் பிறந்தவர்? அதை அன்பு கூர்ந்து சொல்லுங்கள்” என்றேன்.

அதற்கவள், “அவர் தகப்பனார் யாரோ ஒரு முனிவராம், அவர் தாய் ஒரு பறைச்சியாம்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/182&oldid=1582157" இலிருந்து மீள்விக்கப்பட்டது