உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

66

மறைமலையம் -14

பெண்பிள்ளைகளைப்

“ஆம், அவர் தந்தையர் யாளிதத்தார் என்னும் ஒரு சிறந்த முனிவர், அவர் ஒருபுலைச்சியை மணந்தது உண்மைதான். ஐம்புல ஆசைகளையும் முற்றத்துறந்த ஒருமுனிவரர் தன்னை விரும்பும்படி சய்த அப்புலைச்சி மற்றப் போன்றவளாய் இருப்பளா? அவள் அழகிலுங் குணத்திலுஞ் செய்கையிலும் நிகரற்றவளாய் எல்லாப் பெண்பிள்ளைகட்கும் மேலானவளாய் இருந்திருக்கவேண்டுமன்றோ? மற்றைப் பெண்பாலாரிடத்துங் காணப்படாத சிறந்த இயல்புகள் அவளிடத்திற் காணப்பட்டமை யாலன்றோ அருந்தவத்தோரான அம்முனிவர் அவளை விரும்பி மணந்துகொண்டனர். அவ்வளவு சிறந்த அப்பெண்ணரசியை நம் பார்ப்பன மகளிரினுஞ் சிறந்த தெய்வ மகளாகச் சொல்ல வேண்டுமே யல்லாமல் வெறும் பிறப்புப்பற்றிப் புலைச்சியாகச் சொல்லுதல் பெருங்குற்றமாம். அதுபோகட்டும். அவள் வயிற்றிற் பிறந்ததற்காக திருவள்ளுவரை ழித்துப் பேசினால், மீன் பிடிக்கும் வலைச்சி வயிற்றிற் பிறந்த வியாச முனிவரையும் இழித்துப் பேசவேண்டி வருமே! ஆனால், அவரை மட்டும் வேதங்களை வகுத்தவரென்றும் பதினென் புராணங்களையும் மகாபாரத்தையும் இயற்றினவ ரென்றும் மிக உயர்த்துப் பேசி அவரைத் தெய்வமாக வணங்குவதேன்? மேலும், நம் பார்ப்பனப் பிரிவினர்க்கு முதற்றந்தை தாயரான ருஷிகளும் ருஷி பத்தினிகளும் எப்படிப்பட்ட பிறப்பினர் என்பதை நம்மவர் மறந்துபேசுவது எனக்கு பெருவியப்பாய் இருக்கின்றது.

“சேற்றிற் பிறந்த செங்கழுநீர் போலப்

பிரமற்குக் கூத்திவயிற்றிற் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றிற் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப் புலைச்சிதோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசர்க்கு மீன்வாணிச்சி வயிற்றிற் பிறந்த வியாசரும்"

என்று நம் முன்னோர் பிறப்பைக் கூறுங் கூறுங் கபிலரக வலைச்சிறிது படித்தாலும் இவ்வுண்மையெல்லாம் நன்றாய் அறியலாமே. இன்னுந் தீர்க்கதமஸ் என்னும் முனிவர்க்குத் தாசிவயிற்றிற் பிறந்த கக்ஷிவத் என்பவர் இயற்றிய மந்திரங்கள் தெய்வத்தன்மை யுள்ளனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இருக்கு வேதத்தின் முதல் மண்டிலத்திலும் ஒன்பதாம் மண்டிலத்திலுஞ் சேர்க்கப்பட்டிருக் கின்றன அல்லவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/183&oldid=1582158" இலிருந்து மீள்விக்கப்பட்டது