உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

சொன்னவைகள்

155

இன்னும் இப்படியேயுள்ள நம்முன்னோர்களின் பிறப்பு வரலாறுகளை ஆராயப்புகுந்தால், அவை அளவில்லாமல் இருக்கின்றன. இவைகளையெல்லாம் நடுநிலைமையோடு ஆழ்ந்து நினைத்துப் பார்க்குங்கால் பிறப்பினால் ஒன்றும் இல்லை; அவரவர் அறிவின் மேன்மையாலும், அவர் செய்யும் அரும்பெருங் செய்கையாலும், அவர்க்குள்ள ஈகை இரக்கம் முதலான முதலான உயர் உயர் குணங்களாலுமே எல்லாச் சிறப்புகளும் உண்டாகின்றன என்று தெளிவாய் அறிகின்றோம். ஆகையால், அறிவிலும் உயர்குணச் செய்கை யிலும் ஒப்புயர் வின்றி விளங்கிய திருவள்ளுவ நாயனாரைத் தெய்வமாக நினைத்து வழிபட வேண்டுவதாயிருக்க அவரைப் பிறப்பினால் இழிந்தவராக நினைக்குந் தீவினைக்கு நாம் உள்ளாகப் படாது. நம்முடையவேத ஆகம புராண இதிகாசங்களிற் பெரும்பாலும் நம்மவர்க்குத்தான் பொருத்தமாகத் தோன்றும்; மற்ற நாட்டாரும் மற்றச் சாதியாரும் மற்றச் சமயத்தாரும் அவைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளில் உள்ள உண்மைகளோ எல்லா நாட்டார்க்கும் எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத் தார்க்கும் பொருத்தமானவைகள்; அதிலுள்ள பொருள் களை எல்லாருந் தலைமேல் ஏற்றுக் கொள்வார்கள்; அதனால் உலகத்திலுள்ள எல்லா மக்களும் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றுச் சிறப்பார்கள். எல்லாரையுங் கரையேற்றும் இத்திருக்குறள் என்னுஞ் செந்தமிழ் லேகத்திற்கு நிகரானது எந்த மொழியிலும் எந்தநாட்டிலும் இல்லை. இப்படிப்பட்ட பேரறிவுநூல் நமது சமஸ்கிருத பாஷையில் இருந்தால் அதனைச் செய்தவர் பெயரை மறைத்து அது கடவுளே அருளிச் செய்ததென்று நம்மவர் கூறிவிடுவார்கள். பழைய தமிழ்ப் புலவர்கள் பொய்யுரை கூறாத புனிதர்களாதலால் அதனை ஆக்கிய திருவள்ளுவர் பெயரை மறையாமல்,

L

“அறம்பொருள் இன்பம்வீ டென்னும் அந்நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/184&oldid=1582159" இலிருந்து மீள்விக்கப்பட்டது