உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

❖LDMMLDMOLD-14

வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார்”

என்று அவரைத் தெய்வமாகக் கொண்டு பழைய காலந் தொட்டு வணங்கி வருகிறார்கள்' என்று தொடர்பாய்ப் பேசினேன்.

யான் சொல்லிய இவைகள் எல்லாம் என் அத்தையார் மனத்திற்கு மிகவுந் இசைவாய் இருந்தமையால் அவர் மட்டும் அடங்கா மகிழ்ச்சியுடையவராயினார். மற்றப் பெண்பிள்ளை களிற் சிலர் அவற்றை மனங்கொண்டவராயுங் கொள்ளாதவ ராயுங் காணப்பட்டனர். அவர்களில் என்னைக்கேள்வி கேட்டவன் மட்டும் யான் சொல்லியவகைகளை முற்றும் மறுத்துக்கூற விரும்பினளாயினும், யான் பேசியவை அவ்வளவும் மறுக்கக் கூடாத நூற்பிராமணங்களோடு அறிவுக்கும் அனுபவத் திற்கும் ஒத்து இருந்தமையால், உடன்பாடு உடையவள்போற் சிறிது நேரம் சும்மா இருந்து பிறகு,

66

'ஆமம்மா கோகிலம், நீ சொல்லிய தெல்லாஞ் சரிதான், நீ இவ்வளவு விசேஷமாய்ப் படித்திருப்பதற்காக நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன்” என்று என்னைத் தனது பண்ணிக் கொள்வாள் போல் மகிழக்கூறி, மறுபடியும் “ஆனால் ஒன்று, அகஸ்தியர் முதலான மகருஷிகளும், மாணிக்கவாசகர் ஞான சம்பந்தர் முதலான மகாஞானிகளும், பிராமணர்களேயாயினும் அவர்களெல்லாஞ் சூத்திர தேவதையாகிய சிவனைக் கொண்டாடினபடியால் அவர்கள் நம்மினத்தவர்களால் பூஜிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப் பட்டார்கள்; ஆனதால், அவர்கள் பாடிய தேவாரப் பாடல்களை நாம் படிக்கக் கூடாது' என்று சொன்னாள்.

அதற்குமேல் நான் “சிவபெருமான் சூத்திரதேவதை என்றீர்களே; அதன் கருத்துயாது? அதனை எனக்கு விளங்கச் சொல்லுங்கள்” என்றேன்.

"சூத்திர தேவதையென்றால் அடிமை வேலை செய்யுந் தாழ்ந்த சாதியார்க்கு மட்டுந்தான் அவன் தெய்வம் என்பது அர்த்தம்” என்றாள்.

“சிவம் தாழ்ந்த சாதியார்க்குத் தெய்வம் என்று சொன்னால் அனுபவத்தில் அப்படியேயிருக்கவேண்டுமே. தாழ்ந்த சாதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/185&oldid=1582160" இலிருந்து மீள்விக்கப்பட்டது