உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கோகிலாம்பாள் கடிதங்கள்

L

சிவபெருமானுக்குச்

157

எல்லாரும் மாரி பிடாரி காட்டேரி எசக்கி இருளன் மதுரைவீரன் முதலான தேவதைகளையல்லவோ வணங்கி வருகிறார்கள்; சிவம் என்னும் பெயர்கூட அவர்களிற் பெரும்பாலார்க்குத் தெரியாதே. வடக்கே கைலாசம் காசிமுதல் தெற்கே இராமேசுவரம் வரையிற் பழைய காலத்திலிருந்தே சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வேதாகம விதிப்படி நாடோறும் பூஜையும் பருவ காலங்களில் திருவிழாக்களுஞ் செய்யப்பட்டு வருதலன்றோ நமக்கு ஒவ்வொரு நாளும் அனுபவமாய்க் ரு காணப்படுகின்றது. சிவாலயங் கட்குச் செல்பவர்களெல்லாரும் உயர்ந்தவர்களாகவே இருக்கக் காண்கின்றோமேயல்லாமல், தாழ்ந்தவர்கள் அவற்றின் உள்ளே செல்லுவதற்கும் இடம்பெறுவ தாயில்லையே. சிவபெருமான் திருவுருவங்களைத் தொட்டுப பூசிக்கும் ஆதிசைவப் பிராமணர் களைத் தவிர, மற்றப் பிராமணர்கள் அத்திருவுருவங்களின் அருகே சென்றாலுந் தீட்டாயிவிடும் என்று அவர்கள் எட்ட நிற்கும் படி கற்பிக்கப்பட்டிருத்தலை நம்நாட்டில் எங்கும் நாடோறும் நாம் கண்டுவருகின்றோமே. அப்படியிருக்கச் சிவம் தாழ்ந்த சாதியார்க் குரிய சூத்திரதேவதை என்று சொன்னால் அதை நாம் எப்படி ஒப்புக்கொள்ளக்கூடும்?” என்று அமைதியாகப் பேசினேன்.

அதற்கவள் உடனே பரபரப்பாய் “அது சரிதான். சிவன் கோயில்களைப் போலவே ஸ்ரீமந் நாராயணன் ஆலயங்களும் இம சேது பரியந் தம் இருக்கின்றனவே. விஷ்ணுமூர்த்தியைத் தான் பிராமணளாகிய நாம் வணங்கவேண்டும்” என்று உரக்கப் பேசினாள்.

து

அதற்கு நான் பின்னும் அமைதியாகவே மெல்லிய குரலிற் “சிவபிரான் சூத்திரதேவதை என்றும், அவர் பிராமணர்களால் வணங்கத் தக்கவர் அல்லர் என்றும் நீங்கள் சொல்லியது அனுபவத்திற்கு ஒத்ததாயில்லையேயென்று நான் எடுத்துக் காட்டினேன். சிவபிரான் பிராமணர்களாலும் மகருஷிகளாலுந் தேவர்களாலும் வணங்கத்தக்க முழுமுதற்கடவுள் என்பதை நாம் எல்லாங் கட்டாயமாக ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டியிருக் கின்றது” என்று வலியுறுத்திப் பேசினேன்.

“சிவன் பிராமணர்களாலும் மகருஷிகளாலும் வணங்கத் தக்கவர் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அவர் முழுமுதற்கடவுள் என்றும் எல்லாத் தேவர்களாலும் வணங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/186&oldid=1582161" இலிருந்து மீள்விக்கப்பட்டது