உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் -14

தக்கவரென்றும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவர் விஷ்ணு மூர்த்திக்குத் தாழ்ந்தவர் என்றும், அவர்க்கு மேற்பட்ட விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என்றுங் கைக்கொள்வதே பிராமணர்களாகிய நமக்குக் கடமை” என்று அவள் பின்னும் உரத்துக் கூறினாள்.

6

"நல்லதம்மா, உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்னும் எண்ணத்தோடு நாம் பேசுவதாயிருந்தால், ஏதோ எனக்கு தெரிந்த மட்டும் பேசுகின்றேன். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் கோபிக்கிறதென்றால் என் பேச்சை இவ்வளவோடு நிறுத்திக் கொள்ளுகின்றேன்' என்று பணிவோடு கூறினேன்.

உடனே அத்தையார் “அம்மா, நீ சொல்வதிற் கோபத்திற்கு டமான து ஒன்றும் இல்லையே. சாஸ்திரங்களில் எழுதியிருப்பதை தானே நீ எடுத்துச் சொல்லுகிறாய்” என்று எனக்கு ஆறுதலாகக் கூறினார்.

66

அதைக்கேட்டதும் என்னோடு வாதாடின அந்த அம்மை 'ஆமா, கோகிலம் சொல்வதில் நாம் கோபிக்க வேண்டியது என்ன இருக்கின்றது. அம்மா நீ சொல்லு” என்று தானும் ஆறுதல் சொல்வாள் போற் கூறினாள்.

அதன்மேல் நான் “அப்படியானால் நான் உங்களை நமஸ்கரிகின்றேன். சுருதி யுக்தி அனுபவங்களை ஒட்டி என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டும் பேசுகின்றேன். அம்மா, நம்மைச் சுற்றிலும் என்னென்ன காண்கின்றோம். நம்மையொத்த மனிதர்களையும், மனிதர்களல்லாத பலவகைப் பிராணிகளையும், பிராணிகளினுந் தாழ்ந்த மரஞ்செடி கொடிகளையும், உயிர்அற்ற மண் தண்ணீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் பஞ்சபூதங் களையும், இப்பஞ்ச பூதங்களின் சேர்க்கையாற்றோன்றிய பலவகைப் பண்டங்களையும், இவற்றிற்கு இருப்பிடமான இந்த மண்ணுலகத்தையும், இந்த மண்ணுலகத்திற்கு மேலே விளங்கும் சூரிய சந்திர நாட்சத்திர மண்டிலங்களையும் அல்லாமல் இவற்றிற்கு வேறான தேவர்களை யேனும், தேவர்களினும் மேற்பட்ட கடவுளையேனுங் காண்கின்றோமா? இத்தனை உயிர்களையும் இத்தனை பண்டங் களையும் இத்தனை உலகங்களையும் படைத்தவரான கடவுள் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/187&oldid=1582162" இலிருந்து மீள்விக்கப்பட்டது