உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

159

இருக்கவேண்டுமென்பது உண்மையே யென்றாலும், அவரை நாமுங் கண்டதில்லை, மற்றவர்களுங் கண்டதில்லை. தம் வாழ்நாள்முழுதும் வேத வேதாந்தங்களைக் கரைகண்டு படித்தவர்களும் அவரைக் கண்டவர்களாயில்லை. இத்தகைய நிலைமையில் நாம் இருக்கையில், ‘விஷ்ணுவே முழுமுதற் கடவுள், சிவன் அவர்க்குத் தாழ்ந்தவர்' என்று சொல்வது எப்படி? உலகத்திற்கு ஒரு கடவுளே யிருக்கவேண்டுமல்லாமல், இரண்டு கடவுளரும், அவ்விருவரில் ஒருவர் உயர்ந்தவரும் மற்றவர் அவர்க்குந் தாழ்ந்தவருமாய் இருப்பர் என்பதும் எப்படி?” என்று கேட்டேன்.

க்கேள்விகளுக்கு விடைசொல்லத் தெரியாமல் விழித்த அப்பெண்பிள்ளை சற்றுப் பொறுத்துக் “கடவுளைப் பற்றி நமக்குத் தெரியாவிட்டாலும் வேதங்களிலும் புராணங்களிலும் அவருடைய லக்ஷணங்களைப் பற்றிச் சவிஸ்தாரமாய்ச் சொல்லி யிருக்கின்றதே. நாராயணமூர்த்தி ஒருவரே தசாவதாரங்கள் எடுத்து இராவணன் கும்பர்கணன் துரியோதனன் முதலான இராக்ஷதர்களை அழித்து உலகத்தை இரக்ஷித்தார் என்று சொல்லியிருக்கின்றதேயல்லாமற் சிவன் அப்படி இரக்ஷித்தார் என்று சொல்லவில்லையே. அதனால் நாராயணனே கடவுள்" என்று இப்போது சிறிது அமைதியாகப் பேசினாள்.

"நல்லதம்மா, வேதங்களிற் சொல்லியிருப்பதைப் பற்றிப் பிறகு ஆராய்வோம். எனக்குப் புராணகதைகளில் நம்பிக்கை யில்லையானாலும், நீங்கள் சொன்னமட்டிலாவது பொருத்தந் தானா வென்று பார்க்கவேண்டும். இராவணன் முதலான மிகக் கொடிய அரக்கர்களை விஷ்ணு பிரமன் இந்திரன் முதலான எவர்களும் அழிக்க இயலாமல் அவர்களால் துன்புற்றனர் என்றும், அதனாற் சிவபிரான் மகனாரான சிவசுப்பிரமணியக் கடவுளே தோன்றி அவர்களை யெல்லாம் அழித்துத் தேவர்களையும் உலகத்தாரையும் இரட்சித்தனர் என்றும் பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ஸ்காந்தமகாபுராணம் சொல் லு கின்றதன்றோ? விஷ்ணு முதலான தேவர்களாலும் அழிக்கக்கூடாத சூரபத்மன் முதலாயினாரை முதலாயினாரை அழித்து உலகத்தை இரட்சித்தது சிறப்போ? அவர்களினுந் தாழ்ந்த இராவணனை அழித்தது சிறப்போ? மேலுங் கைலாசத்தைப் பெயர்த்தெடுத்த அந்த இராவணனைச் சிவபிரான் தமது காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/188&oldid=1582163" இலிருந்து மீள்விக்கப்பட்டது