உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

❖LDMMLDMOшLD -14

பெரு விரலால் அம்மலையோடு சேர்த்து அழுத்தி அதன்கீழ் அவனை நெரித்திருக்க, அவனோடு பலநாள் எதிர்நின்று போர்புரிந்து வருந்திக் கடைசியில் அப்பெருமான் அருளால் அவனை மடித்த விஷ்ணுவின் அவதாரமான இராமனது வெற்றியைச் சிறந்ததாகக் கூறி அதனால் அவனே கடவுள் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும்?' என்று கேட்டேன்.

"நல்லது, விஷ்ணு பத்தவதாரம் எடுத்ததுபோலச் சிவனாவது சுப்பிரமணியராவது பத்தவதாரம் எடுத்தார்களா? மனுஷ்யாளான நம்மைக் காக்கும்பொருட்டு மனுஷ்யாவ தாரத்தில் வந்த நாராயண ரன்றோ கிருபாளு, சர்வஜீவதயாபரனான அவரன்றோ கடவுள்” என்று அந்த அம்மை எடுத்த விஷயத்தை விட்டுப் டுப் பொருந்தாத தொன்றைச் சொல்லி என்னை மடக்கப்பார்த்தாள். இப்படியே எங்கள் இனத்தவரில் ஆண் பெண் இருபாலாரும் உண்மையின்ன தென்று தெளிந்து நாம் அடைவதில் விருப்பம் இல்லாதவர்களாய்த் தாம் பிடித்த பொய்யையே சாதிக்கும் அகங்காரம் உடையவர்களாய் இருப்பதுடன், தாம் நினைப்பதும் பேசுவதுஞ் செய்வதும் வேதாகம புராண இதிகாசங்களுக்கு முற்றும் மாறாய் இருந்தும் தாம் வைதிகர் என்றும் சாஸ்திரக்ஞர் ஸ்மார்த்தர் என்றும் இறுமாப்போடு வீண் உரையாடுவதும் என் மனத்திற்கு மிகுந்த துயரத்தை விளைவித்தது. இந்தப் பெண் பிள்ளை வீண்வம்பு பேசுவதால் இவளோடு தொடர்பாகப் பேசுவதிற் பயனில்லை யென்றெண்ணிச் சிறிதுநேரம் சும்மா இருந்தேன். கல்வியிலும் உண்மை தெரிவதிலும் நிரம்பிய ஆவலுடைய அத்தையாரோ என்னைச் சும்மா இருக்கவிடாமல்,

66

குழந்தே, பரமசிவம் பிறப்பு இறப்பு இல்லாதவராயிற்றே, ஆனதால், அவர் அவதாரம் எடுத்துவராதது குற்றமாகுமா?” என்று எனக்குத் துணையாக என்னைநோக்கிப் பேசினார்.

அத்தையார் உண்மையறிந்து பேசுவதால், அவர் பொருட் L டாகவேனும்இதனை விளக்கிப் பேசவேண்டுமென நினைந்து, "அத்தே, இந்த அம்மா அவர்கள்பத்துத்தரம் பிறந்ததை விஷ்ணுவுக்கு ஒரு மேன்மையாகச் சொல்லுகிறார்கள். ஆழ்ந்து நினைந்துப் பார்த்தால் கடவுளுக்குப் பிறப்பு சொல்லுவது குற்றம் என்பதனை அவர்களே நன்றாய் உணரக்கூடும். நம்மவர்கள் குற்றமான செயல்களுக்குப்பெரிய பெயர்களை வைத்து அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/189&oldid=1582164" இலிருந்து மீள்விக்கப்பட்டது