உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

161

மறைத்துவிடுவது வழக்கமாயிருக்கின்றது. நாராயணர் பத்துத்தரம் பிறந்ததைத் ‘திரு அவதாரம்' என்று சொல்லி விட்டால் அக்குற்றம் மறைந்துவிடுமோ? மனிதர்களுக்குங் கடவுளுக்கும் உள்ள வித்தியா சந்தான் யாது? கடவுளும் மனிதரைப் போற் பிறந்து இறந்தால் இவர் கடவுள் இவர் மனிதர் என்று நாம் பிரித்தறிவ தெப்படி?" என்று நான் சொல்லுகையில் அந்தப் பெண்பிள்ளை,

66

எவராலும்

ராவணன்

அழிக்க முடியாத இரா துரியோதனன் முதலான கொடியவர்களையெல்லாம் அந்த விஷ்ணு பகவான் இராமனுங் கிருஷ்ணணுமாய்த்தோன்றி வேரோடு அழித்தாரே, அப்படிப்பட்ட பராக்கிரமச்செயல் மற்ற மனிதர்களாற் செய்யக் கூடுமோ? அவ்வளவு உத்திருஷ்டமான பராக்கிரமத்தைக் கண்டு தான் அவரைக் கடவுளாக நாம் துணிந்து பூஜிக்கிறோம்" என்று மிக்க நியாயமாகப் பேசுவது போற் கூறினாள்.

"உயர்ந்த பராக்கிரமச் செயல் உடையவர்களையெல்லாங் கடவுளாகச் சொல்லுகிறதென்றால் இராவணன் வலிமையை அடக்கிய வாலி கார்த்தவீரியார்ச்சுனன் முதலானவர்களையும், இராம லட்சுமணர்களை நாகபாசத்தாற் கட்டி மயக்கமடையச் செய்த இந்திரசித்தினையும் கிருஷ்ணனை அம்பால் எய்து விழச் செய்த வேட்டுவனையும், சண்டையில் வெற்றிபெற்று விளங்கிய வீமார்ச்சுனர்களையும் ஓரிரவிற் பாண்டவர் படை முழுதுங் கான்று நிகரற்று உலாவிய அசுவத்தாமரையும், மற்ற நாடுகளில் இங்ஙனமே வெற்றியில் மேம்பட்டுநின்ற வேந்தர் களையுங் கடவுளராகவன்றோ சொல்லவேண்டிவரும். அங்ஙனஞ் சொன்னால் உலகத்திற்கு ஒரு கடவுள் என்பதுபோய் வலிமை யுள்ள மனிதர் ஒவ்வொருவருங் கடவுளர் என்றன்றோ சொல்ல வேண்டிவரும். அவ்வாறு கடவுளராக நாம் சொன்னாலும் அவர்கள் அப்பெயரை நிலை நிறுத்திக் கொள்ள வல்லவர் ஆவார்களா? எவ்வளவு வலிமையுடை யவர்களும் இறவாமல் நிலைநின்றார்களா? இராவணன் இறந்தான்; இராவணனிலும் மேற்பட்ட வாலியுங் கார்த்தவீரியார்ச்சுனனும் இறந்தனர்; இராம லட்சுமணர்களும் இறந்தனர்; கிருஷ்ண பகவானும் இறந்தனர்; எவர்க்குப் பிறப்பு உண்டோ, அவர்க்கு இறப்பும் உண்டு. இறப்புப்பிறப்புகளுக்கு உள்ளாகும் இந்த ஊன் உடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/190&oldid=1582165" இலிருந்து மீள்விக்கப்பட்டது