உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

6

❖LDMMLDMOшILD -14❖

யவன்.

அறியாமையிற் கிடந்து நல்வினை தீவினைகளைச் செய்யும் நம்போன்ற சிற்றுயிர்களுக்குக் கடவுளாற் படைத்துக் கொடுக்கப் படைத்துக்கொடுக்கப் படுவதாகும்.அழியாமைக்கும் இருவினைக்கும் அப்பாற்பட்டுள்ள கடவுளுக்கு இத்தகைய ஊன் உடம்பு வரமாட்டாது. மாயா சரீரத்தை உயிர்களுக்குப் படைத்துக் கொடுப்பவன் தான் ஒரு மாயா சரீரத்தை அடைவானா? ஒரு காலத்தும் அடைய மாட்டான். அவன் அருளையே திருமேனியாக உடை எப்படிப்பட்ட தேவர்களும் மாயையிற் கடவுளால் உண்டாக்கப் பட்ட பல வகையான சரீரங்களை உடையவர்களாய் நோயுந் துன்பமுங் கவலையும் கொண்டு தமக்கு வரையறுத்த கால முடிவில் இறப்பவர்களாயிருக்கின்றனர் என்று அவரவர்க் குரிய புராணங்களே தெளிவாகக் கூறுவதால், முழுமுதற்கடவுள் ஒருவனைத் தவிர மற்றெல்லாரும் பிறந்து இறக்குஞ் சிற்றுயிர்களேயென்பது சவ்வையாக விளங்குகின்றது. சிவபிரான் ஒரு தாயின் வயிற்றிற் கருவாய்த் தங்கிப் பிறந்து இறந்ததாக எந்தப் புராணமுஞ் சொல்லாமையால் அவர் ஒருவரே முழுமுதற்கடவுள். நாராயணன் பத்துப்பிறவியெடுத்து இறந்தமையால் அவர் ஒரு காலத்தும் கடவுளாகமாட்டார். இங்ஙனஞ் சிவபிரான் ஒருவரே எல்லாத் தேவர்கட்கும் மேலான பிரமமாய் இருப்பதுபற்றியே சாம வேதத்தைச் சேர்ந்த சதபதப் பிராமணமும் சிவபிரானை நோக்கி "நீர் தேவர்களிலே பிராமணர்' (த்வம் தேவேஷு ப்ராஹ்மண:) என்று கூறித் துதிக்கின்றது. மற்றச் சாதியாரெல்லார்க்கும் மேலானவராகத் தம்மைத்தாமே எண்ணிக்கொள்ளும் பிராமணராகிய நாம் தேவர்களிற் பிராமணராய் இருக்கின்ற சிவபிரானையன்றோ வணங்கல் வேண்டும்? மேலும், இராவணனைக் கொன்றதனால் உண்டான பாவம் நீங்க இராமர் சிவலிங்கம் வைத்துத் பூஜித்தது இராமேசுவரத்திலும், பாண்டவர்க்கு வெற்றியுண்டாம் பொருட்டுக் கிருஷ்ணபகவான் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு சென்று கைலாசத்திற் சிவபொருமானை வணங்கி அவரது அருளைப் பெற்று மீண்டது மகாபாரத்திலும் விளக்க மாகக் காண்கின்றோமே! இராமகிருஷ்ணரால் முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்ட சிவ பெருமானை, அந்த இராம கிருஷ்ணரைத் தெய்வமாகப் பாவிக்கும் நம்மவர் வணங்காமற் பழிப்பது தம் தெய்வத்தையே பழிப்பதாய் முடிகின்றதன்றோ?

ஆகவே, நம்மவர் நம் முன்னோர்கள் செய்துவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/191&oldid=1582166" இலிருந்து மீள்விக்கப்பட்டது